28 October 2021

அருமருந்து இது திருமருந்து

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அருமருந்து இது திருமருந்து

                        எல்லோருக்கும் எப்போதும் இந்த மருந்து

                        கட்டாயம் தேவையான சொந்த மருந்து

 

1.         பாவ நோயாலே நீ வாடிடும் வேளையில்

            பாசமாயம் எடுக்கனும் இந்த மருந்து

            இந்த பாருக்கே சொந்தமான நல்ல மருந்து

                        மேலோகர்கள் கீலோர்கள்

                        நல்லோர்கள் தீயோர்கள்

                        எல்லோருக்கும் தேவை இந்த அருமருந்து

                        இது பாவிகளை பரலோகம் சேர்க்கும் மருந்து

 

2.         கடையிலே விற்காது காசுக்கும் கிடைக்காது

            காலமெல்லாம் நீ அலைஞ்சும் நடக்காது

            உன் காசு பணம் அது முன்னே நிற்காது

                        அந்தி சந்தி சந்தி மூன்று வேளை கூப்பிட்டா

                        அலறி வந்து உனக்காக செவி கொடுக்கும்

                        நீ நினைச்சதெல்லாம் அப்போது கைகொடுக்கும்

 

3.         எத்தனையோ மருந்து உலகத்திலே இருந்தும்

            அத்தனையும் கிரியை இல்லா செத்த மருந்து

            உந்தன் ஆத்துமாவை கொல்லும் விச மருந்து

                        வார்த்தையிலே ஜீவன் வைத்து

                        ஜீவனையே உயிர்ப்பித்து

                        வானுலகம் கொண்டு செல்லும் அந்த மருந்து

                        அது வானவராம் இயேசு என்னும் நல்ல மருந்து

 

 

சகோ. கே. ஞானோதயம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...