28 October 2021

கர்த்தரைப் போற்றியே வாழ்த்துது

கர்த்தரைப் போற்றியே வாழ்த்துது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

1.         கர்த்தரைப் போற்றியே வாழ்த்துது

            கனிந்துமே என் ஆத்துமா

            களிக்குதே என் ஆவி கருணை

            கூர்ந்தனர் பரமாத்துமா.

 

2.         இன்று தன்னடிமையின் தாழ்மையை

            இறையவர் கண்ணோக்கினார்

            என்றென்றும் எல்லோரும் புகழ

            என்னைத் தன்மய மாக்கினார்

 

3.         பரிசுத்த நாமம் மகிமையாய்

            பகுத்தாரனைத்தும் நல்லது

            பயந்தவர்களுக் கவரிரக்கம்

            பரம்பரைகளுக்குள்ளது.

 

4.         ஆண்டவர் தம் புயத்தை உயர்த்தி

            பராக்கிரமம் செய்திட்டார்

            அகந்தையுள்ளோரைச் சிதறடித்தார்

            அன்பர்க்கருள் மாரி பெய்தார்.

 

5.         பசித்தோரை ஆதரித்தவர்களைப்

            பரிந்து நன்மையால் நிரப்பினார்

            பஞ்சையாய்த் தனவான்களை யவர்

            பாரில் வெறுமையாய் அனுப்பினார்.

 

6.         பிதாகுமாரன் சுத்த ஆவிக்கும்

            மகிமை உண்டாவதாக

            சதாகாலமும் என்றென்றைக்கும்

            மகிமை உண்டாவதாக ஆமென்.

 

- மு. ஆபிரகாம் பண்டிதர்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...