26 February 2022

கானக்குயில் பாடுது கர்த்தர் இயேசு நல்லவர்

கானக்குயில் பாடுது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   கானக்குயில் பாடுது

                        கர்த்தர் இயேசு நல்லவர்

                        குழந்தைக்கூட சொல்லுது

                        கர்த்தர் இயேசு நல்லவர்

                                    இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

                                    என் இயேசு என்றும் என்றும் நல்லவர்

 

1.         வற்றாத ஜீவ நதியே என்னுள்ளே பாடுதே

            என் வாழ்வில் மகிழ்ச்சி பொங்குதே

            உன் அன்பு இரக்கம் தயவு

            என்னையும் தாங்குதே

            உம்மிலே என்றுமே வாழ்வேன்

            சோதனைகள் வந்தாலும் வேதனைகள் வந்தாலும்

            அத்தனையும் உம்மாலே நன்மையாய் மாறுமே

            எங்கள் இரட்சகர் என்றென்றும் நீரே - இயேசு நல்லவர்

 

2.         எங்களின் அன்பின் தெய்வம் நீதியின் ராஜனே

            உம்மாலே நாட்கள் கூடுதே

            உம்கிருபை என்னைத் தாங்க

            உம் அன்பை நானும் சுவைக்க

            உம்மிலே என்றும் நிலைத்திருப்பேன்

            இழப்புகள் வந்தாலும் உறவுகள் சென்றாலும்

            உம்முடைய வல்லமையால் எல்லாமே மாறுமே

            எங்கள் கன்மலை என்றென்றும் நீரே - இயேசு நல்லவர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

25 February 2022

வானம் திறந்து பூமி வந்த

வானம் திறந்து பூமி வந்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                    வானம் திறந்து பூமி வந்த

                        வான்புகழ் இயேசுவை பாடிடுவோம்

                        மனுமக்களின் பாவம் நீக்க

                        தன்னுயிர் தந்தாரே பாடிடுவோம்

 

1.         உன்னதத்தில் என்றும் மகிமையாம்

            பூவுலகில் மா சமாதானமும்

            மனிதர்மேல் பிரியம் உண்டாகும் என்று

            வானவர் பூமானை வாழ்த்தினாரே

 

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

 

2.         கன்னியின் மடியில் பாலகனை

            கண்ணாரக் கண்டு களித்திடவே

            விண் தூதர் கீதம் வானிலே கேட்டு

            மேய்ப்பர்கள் பூமானை பணிந்தனரே

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

 

3.         புல்லணையில் உதித்த அதிசயம்

            தன்னலம் துறந்த அற்புதம்

            காரிருள் நீக்கி அறிவொளி வீச

            பாரினில் வந்தாரே பாடிடுவோம்

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

                        பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...