என் உயிர் நேசர் இயேசுவை

என் உயிர் நேசர் இயேசுவை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

387. இராகம்: இந்துஸ்தானி                            ஏக தாளம்

 

பல்லவி

 

          என் உயிர் நேசர் இயேசுவை-நான்

          எங்கே காண்பேனோ?-பரன் - என்

 

சரணங்கள்

 

1.         உன்னத மாளிகை உயர் அரியணையில்

            உத்தமர் இருப்பாரோ

            இன்னிலந் தங்கும் ஏழையின் அகத்தில்

            இறைவன் இருப்பாரோ-பரன் - என்

 

2.         வாசனை மிகுந்த மணமலர் மீதில்

            மறையவர் இருப்பாரோ

            தாசரை இழுக்கும் நாதத்தில் கீதத்தில்

            தலைமறைந்தி ருப்பாரோ-பரன் - என்

 

3.         தேடு மிடங்கள் எங்குமே காணும்

            திவ்ய இரட்சகனே!

            நாடுமென் ஆத்ம கண்களைத் திறப்பீர்

            நானுமைக் காண்பேனே-பரன் - என்

 

- ஒய். ஆமோஸ்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு