அறுவடை மிகுதி ஆளோ இல்லை

அறுவடை மிகுதி ஆளோ இல்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                   அறுவடை மிகுதி ஆளோ இல்லை

                        அன்பரின் கதறல் கேட்டிடுதே

                                    இயேசுவின் அன்பு நம்மையும் நெருக்க

                                    எழும்பிடுவோம் நாம் சபையோரே

 

1.         நானிலம் முழுவதும் நானூறு கோடி

            நரகத்தின் வழியை நாடிடுதே

            இயேசுவின் அன்பு நம்மையும் நெருக்க

            எழும்பிடுவோம் நாம் வாலிபரே - அறுவடை

 

2.         அமைதி இல்லை நம்பிக்கை இல்லை

            அழுகையும் கண்ணீர் வாழ்க்கையிலே

            உறக்கமும் இல்லை முழு உணவில்லை

            உணர்த்திடுவீர் இதை வாலிபரே - அறுவடை

 

3.         மிருகம் போல் உழைத்தும் வறுமையின் தொல்லை

            வாதையில் வாடிடும் கூட்டத்தைப் பார்

            ஆற்றுவாரில்லை தேற்றுவாரில்லை

            அன்பினைக் காட்டவும் யாருமில்லை - அறுவடை

 

4.         நம்பிக்கையற்ற கல்லறை நாடி

            நாளினில் லட்சங்கள் செல்கிறதே

            திறப்பினில் நிற்க ஆளில்லை என்று

            திகைத்துக் கதறிடும் இயேசுவைப் பார் - அறுவடை

 

5.         அலறிடும் பிள்ளைகள் குரலினைக் கேட்டு

            அழுவதன்றி வேறென்ன செய்வார்

            யாரை அனுப்புவேன் யார் போவார் என்றார்

            கதறலை என் உள்ளம் கேட்டிடாதோ - அறுவடை

           

6.         அன்பரே வந்தேன் அழுகையைக் கண்டேன்

            அர்ப்பணித்தேன் எந்தன் வாழ்க்கையினை

            பாரினில் கழுதையாய் சுமந்தும்மை சென்று

            பாதத்தில் விடுவேன் என் ஜீவனையே - அறுவடை

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு