துய்ய திருப் பாலனே
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
366.
இராகம்: காம்போதி ஆதி தாளம்
கண்ணிகள்
1. துய்ய
திருப் பாலனே; துன்ப
வினை சூழ்ந்ததோ-மகனே
வையகத்தோ
ரால் நமக்கு
வந்த பலன் இது
தானோ?
2. விலகுங் கனி
புசித்து வீழ்ந்த
பாவிகளுக்காய்,
மகனே
வலமைத் தேவாதி
தேவன் மனுடன்
ஆகவேண்டாமோ?
3. கோபாக்கினை
பெரிது, குற்றமில்லாத
ஆடே;-மகனே
பாபத்தைச்
சகித்துப்
பாடுபட்டுத்
தரிப்பாய்
4. நரகத்தைக்
காணாமல் நரர்குலம்
வாழவே-மகனே
தருணத்தில்
சென்றுலகின்
சாபத்தையே தவிர்ப்பாய்
5. மானிடனாய்ப்
பிறந்து, வல்வினையைச்
சுமந்து, மகனே
ஈனச் சிலுவை
தனிலே அறையுண் டிறந்து
6. மரணத்தை
ஜெயங்கொண்டு
வலிய சர்ப்பத்தை
வென்று-மகனே
நரகத்தைப்
பூட்டி-வான நாட்டில்
வருகுவாயே
- வேதநாயகம்
சாஸ்திரியார்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment