எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

 

 

 

          எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே

            எம் பூரண சீயோனே

 

                        கன்மலையின் மேலே கழுகுபோல்

                        உன்னதத்தில் வாழுவோம் - இயேசு

                        பக்தர்கள் ஜெயம் பெற்றே

                        பிதா முகம் காண்போம்

 

1.         ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே

            வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்

            ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்

            ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்

 

2.         அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே

            அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே

            ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே

            ஆ! பேரின்ப ஆத்மாவில் ஆனந்தங் கொள்வோம்

 

3.         மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே

            மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே

            தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய

            தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்

 

4.         ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க

            ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்

            பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்

            பாழுலகை வேகம் தாண்டி அக்கறை சேர்வோம்

 

5.         வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்

            வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்

            மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்

            மத்திய வானவிருந்தில் பங்கடைந்திடுவோம்

 

6.         வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே

            வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே

            வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம்

            வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே


          Em uyarntha vaasasthalamathuvae

            Em poorana seeyoanae

 

                        Kanmalaiyin maelae kazhukupoal

                        Unnathaththil vaazhuvoam - Yesu

                        Paktharkal jeyam pettrae

                        Pitha mukam kaanpoam

 

1.         Gnaanak kanmalaiyae kiristhaesu em aranae

            Vaana seeyoanilae avar aaviyaal piranthoam

            Aezhu thoonkaludan thida asthipaaramudan

            Yesuvin mael nendru veedai naamilangkiduvoam

 

2.         Anbin pooranamae athilae payamillaiyae

            Anbar Yesuvidam athai naati petridavae

            Aaviyaal nerainthae avar anpilae nadanthae

            Aa! paerinpa aathmaavil aananthang kolvoam

 

3.         Maa samaathanamae visuvaasa nampikkaiyae

            Maa parisuththamae maranaththin paadukalae

            Deva saayalumae nammil pooranam adaiya

            Thooya vaazhvai naati naam munnaeriyae selvoam

 

4.         Oatdamae jeyamaai naamum oatiyae mutikka

            Ovvoru thinamum puthiya pelanadaivoam

            Paava saapangkalum puvi aasaiyum jeyiththoar

            Paazhulakai vaekam thanti akkarai saervoam

 

5.         Vaanangkal vazhiyae irangki paran varuvaar

            Vaagnsaiyai sapaiyai andru Yesuvai santhippoam

            Meetpin naal nherungka thalaikal uyarththiduvoam

            Maththiya vaanavirunthil pangkadainthiduvoam

 

6.         Vaalaiyum suzhatri valusarppam thoanriduthae

            Veera aanpillaiyai vizhungka vakaithaeduthae

            Vaana akkiniyaal athaiththiik koluththiduvoam

            Vallamai mikunhtha karththar Yesu naamaththilae

 

 

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு