07 November 2020

ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி

நிஜீ.கீதங்கள்:1150

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆத்துமாவே ஸ்தோத்தரி

                   முழு உள்ளமே ஸ்தோத்தரி

                        ஜீவனுள்ள தேவனைத் துதி - அல்லேலூயா

 

1.         ஒன்று இரண்டு என்றல்ல

            தேவன் தந்த நன்மைகள்

            கோடா கோடா கோடியாகுமே

            ஒன்று இரண்டு என்றல்ல

            நீ செலுத்தும் நன்றிகள்

            கோடா கோடா கோடியாகட்டும் - அல்லேலூயா - ஆத்துமாவே

 

2.         நாட்டிலுள்ள மக்களே

            பூமியின் குடிகளே

            என்னுடனே தேவனைத் துதியுங்கள்

            கூட்டிலுள்ள பறவைப் போல்

            சிக்கிக் கொண்ட நம்மையே

            விடுவித்த தேவனைத் துதியுங்கள் - அல்லேலூயா - ஆத்துமாவே

 

3.         பெத்தலேகேம் வந்தாரே

            கல்வாரிக்குச் சென்றாரே

            இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே

            இம்மகா சிநேகத்தை

            ஆத்துமாவே சிந்திப்பாய்

            நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ - அல்லேலூயா - ஆத்துமாவே

 

4.         நானும் என் வீட்டாருமோ

            போற்றுவோம் ஆராதிப்போம்

            இயேசுவை என்றுமே சேவிப்போம்

            எங்கள் பாவம் மன்னித்தார்

            எங்கள் தேவை சந்தித்தார்

            வருகை வரை நடத்திச் செல்லுவார் - அல்லேலூயா - ஆத்துமாவே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...