25 November 2020

ஆபத்து காலத்தின் அனுகூலனே

பாடல்

To Download Txt Lyrics file

 

                    ஆபத்து காலத்தின் அனுகூலனே

                        என் தேவனே அடைக்கலமே

                        என் பெலனே வாரும்

 

1.         வேடனின் கண்ணுக்கு தப்பிவிடும்

            குருவியைப் போல நானிருக்க

            வழிகளிலே வலைகள் உண்டோ

            வழி நடத்தும் தேவா

 

2.         சத்துரு என்னை நெருங்குகையில்

            தகுதிகள் தானே நிரப்புகையில்

            சிலுவை கொடி ஏற்றிடுவீர்

            சத்திய நாயகரே!

 

3.         கடல் அலை மோதி தாக்குகையில்

            கர்த்தரே முன்னே சென்றிடுவீர்

            என் படகை நடத்திடுமே

            ஜீவனின் அதிபதியே

 

4.         கூப்பிடும் வேளையில் அருகில் வந்து

            துணையாக நின்று நன்மை செய்தீர்

            உம்மைப் போல தேவன் உண்டோ

            மனதுருகும் தேவா

2 comments:

  1. Tq for the song

    ReplyDelete
    Replies
    1. தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்....

      Delete

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...