30 October 2021

இறைவன் தந்த நமது ஆலயம்

இறைவன் தந்த நமது ஆலயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை Youtube-ல் காண...

 

 

 

                    இறைவன் தந்த நமது ஆலயம்

                        பாரம்பரிய மிக்க ஆலயம்

                        திருவிருந்தை தினம் அளிக்கும்

                        நாசரேத்து ஆலயம் நமது தூய யோவான் ஆலயம்

 

1.         களிமண்ணால் ஆன கட்டடம்

            பனை ஓலை வேய்ந்த கூரைதான்

            ஏழு வாசல் ஆலயம் ஏழு தட்டு கோபுரம்

            ஆனது இன்று வியக்க வைத்த ஜீவ ஆலயம்

            மீஷனெரிமார் வேத வார்த்தை விதைத்த ஆலயம்

 

2.         சாண் பத்து என்ற ஊருக்கு

            ஞானஸ்நான பேரு நாசரேத்

            தேரி மணல் திட்டு இன்று

            கல்வி தொழில் நகரமாச்சி

            ஆண்டவருக்கு அனைவருமே நன்றி கூறுவோம்

            ஆத்துமத்தை ஆதாயம் செய்து வாழுவோம்

 

3.         ஆலயத்தின் அழகை கூட்டுவோம்

            ஆலயமாய் வாழ்ந்து காட்டுவோம்

            கோயில்பிள்ளை ரோஷன் கேமரன்

            நாசரேத் தந்தை மர்காஷியஸ்

            போன்றோர் செய்த ஊழியம் நெஞ்சில் பதிய வேண்டுமே

            புதிய சிருஷ்டி புதிய சரித்திரம் சரித்திரம் அடைய வேண்டுமே

 

4.         இயேசுவண்டை வந்து பாருங்கள்

            இருநூறாண்டு வளர்ச்சி கூறுங்கள்

            பொன் விழா வைரவிழா

            கொண்டாடும் பவள விழா

            நற்செய்தி சொல்லும் என்று விசுவாசிக்கிறோம்

            வல்ல ஆவி அருளை வேண்டி பிரார்த்திக்கிறோம்       

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

29 October 2021

தேவாதி தேவனுக்கு ஆராதனை

தேவாதி தேவனுக்கு ஆராதனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    தேவாதி தேவனுக்கு ஆராதனை

                        ராஜாதி ராஜனுக்கு ஆராதனை

                        கர்த்தாதி கர்த்தனுக்கு ஆராதனை

                        இயேசு என்னும் இரட்சகருக்கு ஆராதனை

                                    இந்த பூலோகம் வந்தவரே

                                    ஜீவனையே தந்தவரே உந்தனுக்கு ஆராதனை

 

1.         பரமனுக்குப் பக்தியுள்ள ஆராதனை

            புனிதனுக்குப் புத்தியுள்ள ஆராதனை

            நன்றியுடன் நல்லவர்க்கு ஆராதனை

            வாஞ்சையுடன் வல்லவர்க்கு ஆராதனை

                        உள்ளமெல்லாம் இசைந்திடவே

                        ஜெபிக்கும் இடம் அசைந்திடவே

                        வல்லமையின் ஆராதனை

 

2.         அற்புதங்கள் செய்பவரே ஆராதனை

            அதிசயங்கள் செய்பவரே ஆராதனை

            பலப்படுத்தும் பரிகாரியே ஆராதனை

            திடப்படுத்தும் பரிசுத்தரே ஆராதனை

                        விண்ணப்பத்தை கேட்பவரே

                        ஆபத்தினில் மீட்பவரே

                        ஆசீர்வாத ஆராதனை

 

3.         ஆராய்ந்து அறிபவர்க்கு ஆராதனை

            ஆசீர்வாதம் தருபவர்க்கு ஆராதனை

            ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை

            ஆலயத்தில் ஆண்டவர்க்கு ஆராதனை

                        ஜீவ பலியானவரே

                        ஜீவிக்கிற தேவன் நீரே

                        இயேசுவுக்கே ஆராதனை

 

4.         உயர்த்தெழுந்த உன்னதரே ஆராதனை

            ஜெயித்தெழுந்த மன்னவரே ஆராதனை

            பயப்படாதே என்றவரே ஆராதனை

            என் துணையாய் நின்றவரே ஆராதனை

                        உள்ளமதை ஒப்புவித்து

                        ஆத்துமாவை அர்ப்பணித்து

                        ஆண்டவர்க்கே ஆராதனை

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...