26 May 2020

அஞ்சு கல்லு கையில அற்புதந்தான் பையில

நிஜீ.கீதங்கள்:1120

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அஞ்சு கல்லு கையில அற்புதந்தான் பையில

                        அதிசயந்தான் நடக்க போகுது

                        ஜனங்க ஆடிப்பாடி துதிக்கப் போகுது

                        அடிச்சானய்யா தாவீது நெத்தியடி

                        அதில் விழுந்தானய்யா

                        கோலியாத்து செத்தபடி

                        ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல

                        முரட்டி அடி விரட்டி அடி நெத்தி

 

1.         எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் - அது

            கிதியோனின் கர்த்தருடைய பட்டயம்

            கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே (2)

            ஒரு சட்டி குள்ள தீவட்டி போதுமே (2)

            சட்டியத்தான் கீழே தூக்கி போட்டு உடை

            தீவட்டிக்குத்தான் பயந்து ஓடும் எதிரி படை

 

2.         சிம்சோனின் வைராக்கியம் இருந்தால்

            நீ சீறிவரும் சிங்கத்தையும் கிழிக்கலாம்

            பட்சியின் பட்சணமும் கிடைக்குமே (2)

            பலவானின் மதுரமும் கிடைக்குமே (2)

            கழுதையின் பச்சை தாடை எலும்பு

            எதிரிகளை முறியடிக்கும் இரும்பு

 

3.         சாத்தானை ஓட ஓட விரட்டணும்

            அவன் சேனைகளை

            ஒரு நொடியில் முறிக்கணும்

            சேனைகளின் போர் வீரனாய் நிற்கணும்

            ஜெயம் எடுத்த இயேசுவுக்காய் வாழணும்

            மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார்

            தோல்வியில்லை இனி என்றும் வெற்றியே

 

 

- Pr. Moses Rajasekar

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...