26 May 2020

அண்ணல் கிறிஸ்தேசையனே அரும்பாவிக்கும்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                             பல்லவி

 

            அண்ணல் கிறிஸ்தேசையனே - அரும்பாவிக்கும்

            திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே!

 

                             சரணங்கள்

 

1.         இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை

            திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை

            திருவழியில் - அவரருளொளியில் - தினம்

            தேற்றி நடத்தி ஆளும் - அண்ணல்

 

2.         மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி

            தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி

            தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே - எந்தன்

            தேசிகரும் அவரே! - அண்ணல்

 

3.         உண்மையாய் மனம் நொந்து உருகி வரும் பாவிக்கு

            ஜென்ம பாவத்தோடவன் கன்மபாவமும் போக்கி

            புரிவாரோ - இரட்சை - அவர் நேரே - திவ்விய

            குருவாயுதித்தவரே - அண்ணல்

 

4.         பாவியே நீயும் இன்று பரமன் இயேசுவை அண்டு

            தாவியுன் மனங்கண்டு தர இரட்சை அங்கே யுண்டு

            தவறாதே - மனம் - பதறாதே - நல்ல

            தருணமிதை விடாதே - அண்ணல்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...