அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் - ஏழை

அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் - ஏழை

இராகம்: செஞ்சுருட்டி                           தாளம்: ரூபகம்

 

          அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் - ஏழை

            ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா!

 

சரணங்கள்

1.         சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் - இத்

            தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே                      - அஞ்சலோடு

 

2.         நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே - நின்

            சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே     - அஞ்சலோடு

 

3.         இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் - நல்

            இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன்   - அஞ்சலோடு

 

4.         பார்வை பேச்சு கேள்வி சிந்தை யாவினாலுமே - வரும்

            பாவ தோஷங்கட்கு என்னைப் பாதுகாரையா                 - அஞ்சலோடு

 

5.         ஆயனே அடியானுக்கு நாயன் நீரல்லால் - இம்

            மாய வாழ்வில் ஒன்றுமில்லை மாய்கை மாய்கையே         - அஞ்சலோடு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு