31 August 2021

துய்ய திருப் பாலனே

துய்ய திருப் பாலனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

366. இராகம்: காம்போதி              ஆதி தாளம்

 

கண்ணிகள்

 

1.       துய்ய திருப் பாலனே; துன்ப வினை சூழ்ந்ததோ-மகனே

          வையகத்தோ ரால் நமக்கு வந்த பலன் இது தானோ?

 

2.         விலகுங் கனி புசித்து வீழ்ந்த பாவிகளுக்காய், மகனே

            வலமைத் தேவாதி தேவன் மனுடன் ஆகவேண்டாமோ?

 

3.         கோபாக்கினை பெரிது, குற்றமில்லாத ஆடே;-மகனே

            பாபத்தைச் சகித்துப் பாடுபட்டுத் தரிப்பாய்

 

4.         நரகத்தைக் காணாமல் நரர்குலம் வாழவே-மகனே

            தருணத்தில் சென்றுலகின் சாபத்தையே தவிர்ப்பாய்

 

5.         மானிடனாய்ப் பிறந்து, வல்வினையைச் சுமந்து, மகனே

            ஈனச் சிலுவை தனிலே அறையுண் டிறந்து

 

6.         மரணத்தை ஜெயங்கொண்டு வலிய சர்ப்பத்தை வென்று-மகனே

            நரகத்தைப் பூட்டி-வான நாட்டில் வருகுவாயே

 

- வேதநாயகம் சாஸ்திரியார்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்

இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்

            எந்தனுக்காக சிந்தினீரே

            கோரப் பாடுகள் யாவும் சகித்தீர்

            அத்தனையும் எனக்காகவோ?

 

                        மா பாவியாம் என்னை நினைக்க

                        மண்ணான நாம் எம்மாத்திரம் ஐயா!

                        தேவ தூதரிலும் மகிபனாய்

                        என்னை மாற்றின அன்பை துதிப்பேன்!

 

1.         எம் மேல் பாராட்டின உமதன்புக்கீடாய்

            என்ன நான் செய்திடுவேன்!

            நரகாக்கினையினின்று மீட்ட

            சுத்த கிருபையை நித்தம் பாடுவேன்

 

2.         எந்தன் பாவங்கள் பாரச் சுமை போல்

            தாங்கக் கூடாத மா பாரமே!

            மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா!

            மன்னித்தும் மறந்தும் தள்ளினீர்

 

3.         எந்தன் கால்கள் சறுக்கிடும் போது

            வலக் கரத்தாலே தாங்குகிறீர்

            மன பாரத்தாலே சோர்ந்திடும் போது

            ஜீவ வார்த்தையால் தேற்றுகிறீர்

 

4.         எனக்காக நீர் யாவும் முடித்தீர்

            உமக்காக நான் என்ன செய்வேன்?

            எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம்

            உம் சிலுவை சுமந்து வருவேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...