12 May 2017

கீழ் வான கோடியின்


Moscow

31                                           6, 6, 4, 6, 6, 6, 4

1.         கீழ் வான கோடியின்
            செம் காந்தி சூரியன்
                        எழும்பிடும்;
            அடியார் ஆன்மத்தின்
            நீதியின் சூரியன்
            ஆரோக்கியம் சீருடன்
                        எழும்பிடும்.

2.         ராவிருள் நீங்கிற்றே
            காந்தியும் தோன்றிற்றே
                        பூமி தன்னில்;
            பாவாந்தகாரமும்
            எவ்வறிவீனமும்
            நீங்கிடத் தோன்றிடும்
                        எம் நெஞ்சத்தில்.

3.         வடிவம் வர்ணமும்
            வான் புவி வண்ணமும்
                        காணுவோமே;
            உம் சிஷ்டி நோக்கத்தை
            உம் ஞான ஜோதியை
            உந்தன் நற்பாதையைக்
                        காட்டுவீரே.

4.         ஜீவ இராசிகள்
            நீர் நில வாசிகள்
                        எழும்பவே;
            மகிழ்ந்து மாந்தரும்
            வணங்கிப் போற்றியும்
            செல்வோம் எம் வேலைக்கும்
                        எழும்பியே.

5.         மன்னாவால் போஷியும்
            செல் பாதை காட்டிடும்
                        இந்நாள் எல்லாம்;
            அன்றன்றும் தருவீர்
            ஆடை ஆகாரம் நீர்;
            மோட்சம் நடத்துவீர்
                        ஆயுள் எல்லாம்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...