அனுக்ரக வார்த்தையோடே
வந்தனம் உமக்காமென்
377. (375) சங்கராபரணம் ஆதி தாளம்
1. அனுக்ரக வார்த்தையோடே-இப்போ-து
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்.
2. நின்திரு நாமமதில்-கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்.
3. தோத்திரம், புகழ், மகிமை,-கீர்த்தி,
துதிகனம், தினமுமக்கே
பாத்திரமே; அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!
- ச.ஜெ. சிங்
Comments
Post a Comment