தோத்திரம் க்ருபை கூர் ஐயா


கிருபைகூர் ஐயா

333. (20) கல்யாணி                                                  ஆதி தாளம்

பல்லவி

                        தோத்திரம்! க்ருபை கூர், ஐயா!
                        விழி பார், ஐயா; விழி பார், ஐயா!

சரணங்கள்

1.         பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்
            காத்து வந்திடும், எனது கர்த்தாதி கர்த்தனே! - தோத்திரம்

2.         இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே
            என்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! - தோத்திரம்

3.         மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்;
            எனது தீதகற்றி ஆளும், ஏகாம்பர நாதனே! - தோத்திரம்

4.         போதனே, நீதனே, புனித சத்ய வேதனே,
            கீதனே, தாசர் துதி கேளும், யேசு நாதனே! - தோத்திரம்

- ஏ. அண்ணாவியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு