தோத்திர பாத்திரனே தேவா


தோத்திரந் துதி உமக்கே

336. (16) சங்கராபரணம்                                           ஆதி தாளம்

பல்லவி

            தோத்திர பாத்திரனே, தேவா,
            தோத்திரந் துதியுமக்கே!
            நேத்திரம்போல் முழு ராத்ரியுங்காத்தோய்;
            நித்தியம் துதியுமக்கே!

சரணங்கள்

1.         சத்துரு பயங்களின்றி,-நல்ல
            நித்திரை செய்ய எமை
            பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே[1]
            சுற்றிலுங் கோட்டையானாய். - தோத்திர

2.         விடிந்திருள் ஏகும்வரை-கண்ணின்
            விழிகளை மூடாமல்,
            துடி[2] கொள் தாய்போல் படிமிசை[3] எமது
            துணை எனக் காத்தவனே. - தோத்திர

3.         காரிருள் அகன்றிடவே,-நல்ல
            கதிரொளி திகழ்ந்திடவே,
            பாரிதைப் புரட்டி உருளச்செய் தேகன
            பாங்கு சீராக்கி வைத்தாய். - தோத்திர

4.         இன்றைத் தினமிதிலும்-தொழில்
            எந்தெந்த வகைகளிலும்
            உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள்
            ஊன்றியே காத்துக்கொள்வாய். - தோத்திர
- ப.ஈ. யோவான்



[1] உறங்கவைத்து
[2] பதைக்கிற
[3] பூமியின்மேல்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு