ஆயிரம் ஆயிரம் பாடல்களை
கீதங்களும் கீர்த்தனைகளும் - 25 கிறிஸ்தவ கீர்த்தனைகள் - 231 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்! யாவரும் தேமொழிப் பாடல்களால் இயேசுவைப் பாடிட வாருங்களேன். அல்லேலூயா! அல்லேலூயா! என்றெல்லாரும் பாடிடுவோம்! அல்லலில்லை! அல்லலில்லை! ஆனந்தமாய்ப் பாடிடுவோம். 2. புதிய புதிய பாடல்களைப் புனைந்தே பண்களும் சேருங்களே துதிகள் நிறையும் கானங்களால் தொழுதே இறைவனைக் காணுங்களே - அல்லேலூயா 3. நெஞ்சின் நாவின் நாதங்களே நன்றி கூறும் கீதங்களால் மிஞ்சும் ஓசைத் தாளங்கள...