16 July 2013

ஆயிரம் ஆயிரம் பாடல்களை

கீ.கீ:25

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       ஆயிரம் ஆயிரம் பாடல்களை

            ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்!

            யாவரும் தேமொழிப் பாடல்களால்

            இயேசுவைப் பாடிட வாருங்களேன்

 

                        அல்லேலூயா! அல்லேலூயா!

                        என்றெல்லாரும் பாடிடுவோம்

                        அல்லலில்லை! அல்லலில்லை!

                        ஆனந்தமாய்ப் பாடிடுவோம்

 

2.         புதிய புதிய பாடல்களைப்

            புனைந்தே பண்களும் சேருங்களேன்

            துதிகள் நிறையும் கானங்களால்

            தொழுதே இறைவனைக் காணுங்களேன் - அல்லேலூயா

 

3.         நெஞ்சின் நாவின் நாதங்களே

            நன்றி கூறும் கீதங்களால்

            மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்

            மேலும் பரவசம் கூடுங்களேன். - அல்லேலூயா

 

4.         எந்த நாளும் காலங்களும்

            இறைவனைப் போற்றும் நேரங்களே

            சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்

            சீயோனின் கீதம் பாடுங்களே. - அல்லேலூயா

 

 

- தி. தயானந்தன் பிரான்சிசு

பாடித் துதி மனமே


பாடித் துதி மனமே

18.     (279)                                                  ஆதிதாளம்

பல்லவி
                    பாடித் துதி மனமே; பரனைக் கொண்
                    டாடித் துதி தினமே.

அனுபல்லவி
             நீடித்த காலமதாகப் பரன் எமை
            நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் - பாடி

சரணங்கள்
 1.         தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
            செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
            மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
            விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் -பாடி

2.         சொந்த ஜனமான யூதரைத் தள்ளித்
            தொலையில் கிடந்த புறசாதியாம் எமை
            மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
            மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் -பாடி

3.         எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர்,
            எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்,
            எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
            இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் - பாடி

- வேதநாயகம் சாஸ்திரியார்


கண்களை ஏறெடுப்பேன்

கண்கணை ஏறெடுப்பேன்

17. பியாகு                                                     சாபுதாளம்

பல்லவி
            கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
            கண்களை ஏறெடுப்பேன்.

அனுபல்லவி
             விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
            தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்.  - கண்

சரணங்கள்
 1.         காலைத்தள்ளாட வொட்டார்-உறங்காது காப்பவர்
            காலைத்தள்ளாட வொட்டார்,
            வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
            காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் - கண்

2.         பக்க நிழல் அவரே - எனை ஆதரித்திடும்
            பக்க நிழல் அவரே
            எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா-து
            அக்கோலம் கொண்டென்னை அக்காவல் புரியவே - கண்

3.         எல்லாத் தீமைகட்கும்-என்னை விலக்கியே
            எல்லாத் தீமைகட்கும்
            பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
            நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் - கண்
-த. ஐயாத்துரை

சுய அதிகாரா சுந்தரக் குமாரா


சுய அதிகாரா, சுந்தரக்குமாரா

15.     கமாஸ்                                                ஆதிதாளம்

பல்லவி

          சுய அதிகாரா, சுந்தரக் குமாரா!
          சொந்த உலகந்தனைத் துறந்த மரி மைந்தனான   - சுய

சரணங்கள்

1.         அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே,
            அதையொரு பம்பரம் போலிசைத்தனையே,
            துகில்போலா காயமதை லகுவாய்ச் சமைத்ததிலே
            சோதி பல மாதிரியாய்த் தூக்கி அங்கிலங்க வைத்த - சுய

2.         கரை மத கற்ற குளம் புவியிலுண்டோ?
            கடலுக்கவன் சொல்லயன்றிக் கரைகளுண்டோ?
            திரைதிரையாகச்சலம் மலைபோல் குவிழ்ந்தெழுந்தும்
            சேதமின்றிப் பூதலத்தை மாதயவாய்ப் பாதுகாக்கும் - சுய

3.         நரர் பலர் கூடியொரு மனைமுடிக்க
            நாளெல்லாம் உழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே;
            மரமுயிர் தாது இன்னும் வான்புவி அனைத்தையும் ஓர்
            வார்த்தையால் க்ஷணப்பொழுதில் நேர்த்தியாய் 
                                                          உண்டாக்கி வைத்த - சுய

4.         பாவமனுவோர் முகத்தைப் பார்த்தாயே,
            பாவச்சுமை தோள் சுமந்து தீர்த்தாயே;
            சுவாமியுனைப் பற்றும் தேவ தாசருக்கிரங்கவேண்டும்,
            தஞ்சம் தஞ்சம் ஓடிவந்தோம், கெஞ்சமனு கேட்டருள் 
                                                                                    வாய் - சுய

- யோவான் பால்மர்

அமலா தயாபரா அருள்கூர் ஐயா

கி.கீ:12

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                             அமலா தயாபரா

 

12. (33) ரீதிகௌள                                        ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          அமலா[1], தயாபரா, அருள்கூர், ஐயா,-குருபரா[2]

 

                             சரணங்கள்

 

1.         சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்

            அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த            - அம

 

2.         அந்தம் அடி[3] நடு இல் லாத தற்பரன் ஆதி,

            சுந்தரம் மிகும் அதீத[4] சோதிப்பிரகாச நீதி. - அம

 

3.         ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,

            வானத் தேவப்ரசாத[5] மகிமைக் களவில்லாத. - அம

 

4.         காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,

            தோணப்படா வியாப[6], சுகிர்தத்[7] திருத் தயாப. - அம

 

5.         சத்ய வசன நேயா, சமஸ்த புண்ய சகாயா,

            கர்த்தத்துவ உபாயா, கருணை பொழியும் வாயா - அம

 

6.         எல்லை இல்லா மெய்ஞ் ஞான ஏக பர வஸ்தான

            சொல் அரிதாம் நிதான, துல்லிபத்[8] தொன்றாம் மேலான - அம

 

7.         கருணாகரா, உப காரா, நிராகரா,[9]

            பரமேசுரா, கிரு பாகரா, சர்வேசுரா - அம

 

 

- வேதநாயகம் சாஸ்திரியார்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு



[1] தூயவர்

[2] முதல் ஆசான்

[3] ஆதி

[4] மனதுக்கு எட்டாத

[5] ஜீவ அப்பமாகிய கிறிஸ்து

[6] நிறைந்த

[7] நற்செயல்

[9] உருவமற்றவனே

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...