20 April 2022

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலுயா

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலுயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா

                        மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா

                        அல்லேலூயா ஜீவிக்கிறார் - (2)

                        அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார்

 

1.         மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே

            கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே

            யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே

            சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு

 

2.         கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்

            கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்

            கனிவோடு பெயர்சொல்லி அழைத்திடுவார்

            கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

 

3.         எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்

            இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்

            அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்

            அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்

 

4.         அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே

            இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்

            நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்

            நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...