கல்வாரி அன்பை நான் தியானிக்கையில்

கல்வாரி அன்பை நான் தியானிக்கையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

பல்லவி

 

                   கல்வாரி அன்பை நான்‌ தியானிக்கையில்

                        கல்மனமும்‌ என்னில்‌ உருகிடுதே

                        நல்‌ நேசர்‌ இயேசுவே உம்முடன்‌ யான்‌

                        சிலுவையில்‌ அறைந்திட ஒப்புவித்தேன்

 

‌சரணங்கள்‌

 

1.         என்‌ பாவ சாபமும்‌ ரோகங்களும்

            நின்‌ திரு மேனியில்‌ ஏற்றிடவோ

            கொலை மரமாம்‌ அந்தச்‌ சிலுவைதனில்

            கொலை செய்யப்பட்டோராய்த்தொங்கினீரே! - கல்வாரி

 

2.         கள்வரின்‌ மத்தியில்‌ அறையப்பட்டும்

            முள்முடி சூடியே, துயரப்பட்டீர்‌!

            முகந்தனில்உமிழ்ந்துமே அடிக்கப்பட்டீர்

            மூன்றாணி மீதினில்ஜீவனீந்தீர்‌! - கல்வாரி

 

3.         பதினாயிரம்‌ பேரில்‌ சிறந்த நேசர்‌

            பாதகனைப்‌ போல ஆக்கப்பட்டீர்‌!

            தழும்புகள்தோன்றவே காயப்பட்டீர்

            அழகையும்‌ இழந்தீரே எனக்காகவோ! - கல்வாரி

 

4.         விலையேறப்‌ பெற்ற உம்‌ திரு இரத்தத்தை

            விலாவினின்று நீர்‌ வடித்தீரல்லோ!

            விலையேறப்பெற்ற நல்சபை ஆக்கவே

            தலையானீர்ஜீவனை ஈந்ததாலோ! - கல்வாரி

 

5.         குருசதில்பலியானீர்முற்றிலுமாய்

            குரு இயேசுநாதா நீர்‌ எனக்காகவோ?

            குருசதில்‌ மரித்து நான்‌ பிழைத்திடுவேன்

            குருவே உம்‌ சாயலை அடைந்திடுவேன்‌ - கல்வாரி

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு