04 June 2020

அடியார் உமைவந் தடைந்தனரே

பு.பா.397

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                    அடியார் உமைவந் தடைந்தனரே

                        அழியார் வாழ்வினில் உயர்ந்தனரே.

 

                        தடைகள் யாவையும் தகர்த்தோடி

                        தனிப்பெருஞ் செல்வம் தனைநாடி.

 

1.         கிறிஸ்துவுக்காக வாழ்ந்தோராய்

            கிறிஸ்துவின் சாயலை நயந்தோராய்

            திருப்பணி விரைந்தே புரிந்தோராய்

            திருமறை சார்ந்தே

                        சிறந்தோராய் - அடியார்

 

2.         திருச்சபைக்காக உழைத்தோராய்

            தினந்தினம் துன்பம் சகித்தோராய்

            சிறுமைகள் ஏற்றே மகிழ்ந்தோராய்

            சிலுவையை உலகினில்

                        சுமந்தோராய் - அடியார்

 

3.         தலைமுறை வருவோர் தமக்கெல்லாம்

            தகுநெறி காட்டிச் சென்றனரே

            பலராம் சாட்சிகளுடன் சேர்ந்தார்

            பணிசெய்ய எம்மை

                        ஏவுகின்றார் - அடியார்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...