அதிகாலை
தினம் தேடியே
உன் முகத்தினில் விழித்திடுவேன்
புதுக் கிருபை அதைத் தேடியே
உம் பாதத்தில் அமர்ந்திடுவேன்
ஆனந்தம் பேரின்பம் - என்
அன்பரின் பாதத்திலே
இராஜா அல்லேலூயா - என்
தேவா அல்லேலூயா
1. கரங்களை விரித்து கர்த்தரைப் பார்த்து
காலையில் பணிந்திடுவேன்
கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து
பாதத்திலே முகம் பதித்து
முத்தங்கள் செய்திடுவேன் - இராஜா
2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட
கண்கள் விழித்திடுதே
உம் மனம் குளிர என் மனம் பாட
ஆயத்தமாகிடுதே
உம் வசனம் தியானித்திட
உள்ளம் காத்திடுதே - இராஜா
3. கண்ணிமை நேரம் உம்மை மறவாமல்
கருத்தாய் நினைத்திடவே
கனிவாய் இரங்கி கருணை ஈந்து
கரத்தால் அணைத்திடுமே
நாள் முழுவதும் வல்லமையால்
நிதமும் நனைத்திடுமே - இராஜா
No comments:
Post a Comment