30 January 2019

ஒரு மருந்தரும் குருமருந்து


அரும் குருமருந்தே

126. (367) மோகனம்                                      ஆதி தாளம்

பல்லவி

                   ஒரு மருந்தரும் குருமருந்-(து)
                   உம்பரத்தில் கண்டேனே.

அனுபல்லவி

            அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,
            ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,
            வரும் வினைகளை மாற்றும் மருந்து
            வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. - ஒரு

சரணங்கள்

1.         சிங்கார வனத்தில் செழித்த மருந்து,
            ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து,
            மங்கை ஏவை பவம் மாற்றும் மருந்து
            வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து. - ஒரு

2.         மோசே முதல் முன்னோர் காணா மருந்து,
            மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து,
            தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து,
            தீர்க்கத் தரிசிகள் செப்பிய மருந்து. - ஒரு

3.         தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து,
            செவிடு, குருடூமை தின்ற மருந்து,
            மானா[1] திருத்துவ மான மருந்து,
            மனுவாய் உலகினில் வந்த மருந்து. - ஒரு

4.         செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து,
            ஜீவன் தவறா தருளும் மருந்து,
            பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து,
            பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து. - ஒரு

- யோ. பால்மர்


[1] மகிமையுள்ள

24 January 2019

தேன் இனிமையிலும் ஏசுவின்


ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே

125. (206) ஹரிகாம்போதி                  ஆதி தாளம்

பல்லவி

          தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் 
          திவ்விய மதுர மாமே;-அதைத்
          தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே.

சரணங்கள்

1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;-பாவக்
    கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்; கண்டுணர் நீ, மனமே. - தேன்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;-பின்னும்
    நேமியாம் கருணை நிலைவரமுண்டு; நிதம் துதி, என் மனமே. - தேன்

3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும்;-என்றும்
    கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ, மனமே. - தேன்

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேச ரிடம்;-நீயும்
    அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்; ஆசைகொள் நீ, மனமே. - தேன்

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம்;-அதைப்
    பூண்டுகொண் டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ, மனமே. - தேன்

- அ. சவரிமுத்து


இயேசு நாமமல்லாம் உலகினில்


வேறு நாமம் இல்லை

124. (151) வனஸ்பதி                           ஆதி தாளம்

பல்லவி

            யேசு நாமமல்லாம்-உலகினில்
            வேறு நாமம் இல்லை,-கிறிஸ்து

அனுபல்லவி

            தேசுலாவிய கேரூபீம்பணி
            திவ்ய வானவர் முனிவர் கண்மணி,
            மாசில்லாத மெய்ஞ்ஞான சிகாமணி,
            மதிக்கும் சத்திய வேத சிரோமணி - யேசு

சரணங்கள்

1.         வானமும் புவியும்-கதி-ரோன் மதி[1] உடுவும்[2]
            கானல் வரை[3] கடலும்-நர-ரான எவ்வுயிரும்
            தானே படைத்தருள் ஆதி காரணன்,
            சர்வ ஜீவ தயாபரா பூரணன்,
            ஈனர் வாக்குக் கெட்டாத மெய்யாரணன்,
            இலங்கும் வேத சங்கீத பாராயணன். - யேசு

2.         காவிலாத மேவை-செய்-தீவினையதனால்
            பூவின் மாந்தர் படும்-துயர்-தேவ கோபமற,
            பாவிகளைப் பரனோடுற வாக்கப்,
            பரம எருசலேம் நகர் சேர்க்க,
            மேவுமலகை அரணைத் தூளாக்க,
            மேதினியில் சமாதானம் உண்டாக்க. - யேசு

3.         பண்டு வேதியர்கள்-கைக்-கொண்ட மாமறையில்
            விண்ட நாமமல்லாமல்-உயர்-அண்ட மீதினிலும்,
            மண்டலத்திலும், ஆழி கீழிலும்
            மாருதம்[4] செலும் அட்ட திக்கிலும்,
            தொண்டர் கூக்குரல் எட்டும் தூரத்திலும்,
            துஷ்டர் வர விரும்பாத இடத்திலும். - யேசு

- ஈசாக்கு பாக்கியநாதன்


[1] சந்திரன்
[2] நட்சத்திரம்
[3] மலை
[4] காற்று

இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்


வேறொரு ரட்சகர் உண்டோ

123. (150) மணிரங்கு                    ஆதி தாளம்

பல்லவி

                        யேசுவை அன்றி வேறொரு ரட்சகர்
                        காசினி தனிலுண்டோ, மனமே?-அவர்
                        நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே,
                        மோசம் போவதேன், மனமே?

சரணங்கள்

1.         ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப்
            பூதலம் வந்ததார், மனமே?-கொடும்
            யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய
            போதகம் செய்ததார், மனமே? - யேசு

2.         இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது
            சிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ!
            பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அ
            லைந்து திரிவதேன், மனமே? - ஏசு

3.         பூதல மீதினில் ஓதரி[1] தாம் பரஞ்
            சோதியைப் போற்றிசெய் மனமே;-செய்தால்
            பாதகம் போய் மோட்ச சாதகம் ஆமென்று
            வேதமுரைக்கு தல்லோ மனமே? - ஏசு

- தஞ்சை சத்தியநாதன்




[1] சொல்லுதற்கரிய

ஐயையா நான் ஒரு மா பாவி


என்னை ஆண்டு நடத்துவீர்

122. (132) சயிந்தவி                                                ஆதி தாளம்

பல்லவி

                   ஐயையா, நான் ஒரு மா பாவி;-என்னை
                   ஆண்டு நடத்துவீர், தேவாவி!

சரணங்கள்

1.         மெய் ஐயா, இது தருணம், ஐயா;-என்றன்
            மீதிலிரங்கச் சமயம், ஐயா;
            ஐயையா, இப்போ தென்மேல் இரங்கி-வெகு
            அவசியம் வரவேணும், தேவாவி! - ஐயையா

2.         எனதிருதயம் பாழ்நிலமாம்;-ஏழை
            என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
            தினமும் வந்து வழி நடத்தும்,-ஞான
            தீபமே, உன்னத தேவாவி! - ஐயையா

3.         ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம்-தினம்
            அருவருத்து நான் தள்ளுதற்கு
            வாகான[1] சுத்த மனம் தருவீர்,-நீர்
            வல்லவராகிய தேவாவி. - ஐயையா

4.         பத்தியின் பாதை விலகாமல்,-கெட்ட
            பாவத்தில் ஆசைகள் வையாமல்
            சத்திய வேதப்படி நடக்க,-என்னைத்
            தாங்கி நடத்திடும், தேவாவி! - ஐயையா

5.         அன்பு, பொறுமை, நற் சந்தோஷம்,-என்
            ஆண்டவரின் மேல் விசுவாசம்,
            இன்ப மிகு மெய்ச் சமாதானம்,-இவை
            யாவும் தருவீரே, தேவாவி! - ஐயையா

6.         ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து,-அவர்
            இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
            மாசில்லாத் துய்யனே, வந்துதவும்;-நீர்
            வராமல் தீராதே, தேவாவி! - ஐயையா

- பாக்கியநாதன் தாவீது


[1] அழகான

தீய மனதை மாற்ற வாரும்


தீய மனதை மாற்ற வாரும்

121. (135) மணிரங்கு                                               ஏசு தாளம்

பல்லவி
          தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே,-கன
          நேய ஆவியே.

சரணங்கள்

1.         மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால்,-மிக மாயும்
                        பாவி நான். - தீய

2.         தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே,-மருள்
                        தீர்க்கும், தஞ்சமே. - தீய

3.         பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான்,[1] ஐயா.-ஒரு
                        பாவி நான் ஐயா. - தீய

5.         புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே,-அதைப்
                        புகழ்ந்து காக்கவே. - தீய

5.         ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி, இரந்து கெஞ்சவே,-தினம்
                        இதயம் அஞ்சவே. - தீய

6.         கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே,-அவர்
                        கிருபை தேடவே. - தீய

7.         தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே,-மிகு
                        தெளிவு வேண்டவே. - தீய

8.         ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊற்றி ஜெபித்துப் போற்றவே,-மிகச்
                        சிறப்பாய் ஏற்றவே. - தீய

- வின்பிரட்


[1] பதர்

சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க


சுத்திகரியாயோ

120. (134) செஞ்சுருட்டி                                 ரூபக தாளம்

பல்லவி

                        சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச்
                        சுத்திகரியாயோ,

சரணங்கள்

1.         மத்தியஸ்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே,
            பக்தி தரும் போதனே, உயர் முக்திதரும் நீதனே! - சுத்

2.         பெந்தெகொஸ்து முருகிலே,[1] அங்கு வந்தே சீஷரருகிலே,
            உந்திய[2] கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே! - சுத்

3.         அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே,
            சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல்நேசனே! - சுத்

4.         சத்திய நெறியில் ஏறவே, நற்பத்தியில் தினம் தேறவே,
            புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே. - சுத்

5.         தேவ நல் வர மானவா, எங்கு மேவு மூன்றில் ஒன்றானவா,
            பாவ மாசினைப் போக்குவாய், நித்திய சாபம் யாவையும் நீக்குவாய். - சுத்

- யோ. பால்மர்


[1] பண்டிகையில்
[2] உயர்ந்த

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...