தேவா சுகம் அருள்வாய்

தேவா சுகம் அருள்வாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

372. இராகம்: துவாசந்தி                                 அடதாளம்

 

பல்லவி

 

          தேவா, சுகம் அருள்வாய்-நின் தாசனுக்கு;

          தேவா, சுகம் அருள்வாய்

 

அனுபல்லவி

 

            பாவ ரோக மகல ஜீவ மருந்தளித்த

            பாக்கியனே, சத்ய வாக்கியனே; யேசு - தேவா

 

சரணங்கள்

 

1.         ஆபத்துக் கால மிதில்-நின் தாசனை

            அன்பாய் அணைத்திடுவாய்;

            கோபம் வைத்தால் தாங்க மாபாவி எங்களால்

            கூடுமோ; மா கருணாநிதியே?-யேசு - தேவா

 

2.         மாய உலகமிதிலே நின் மக்கட்கு நீ

            மாத்திர மல்லா தில்லையே;

            காயம்[1] எடுத்துப் பாரில் காயம்[2] ஐந்து தரித்துக்

            கஷ்டப் பட்டிறந் துயிர்த்தெழுந்த எங்கள் யேசு - தேவா

 

3.         மருந்தும் வைத்தியனும் நீரையா-அல்லா லெமக்கு

            மானிலத்தில் வேறில்லையே;

            வருந்தும் நின்னடியானோ டிருந்து நின் தயவீந்து

            மனமிரங்கிப் பாவ மன்னிப் பருள்வதோடே - தேவா

 

- பி.ஜே. சிங்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 



[1] உடல்

[2] புண்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு