30 June 2022

மண்ணிலே பாவத்தினாலு தித்து வந்த

மண்ணிலே பாவத்தினாலு தித்து வந்த பாவி யான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

கண்ணிகள்

 

          மண்ணிலே பாவத்தினாலு தித்து வந்த பாவி யான்

            மசலையான நாள் துவக்கி வம்பிலே நடந்த நான்

            கண்ணினாலே செய்த பாவம் எண்ணினாலும் முடியுமோ

            காதோடை பொறிவினை கணக்கினை காணாகாதே

            புண்ணியம் மனத்துடைய பேருமற்ற வஞ்சகன்

            உளையனான பாவிநான் புரிந்த கண்டங்கன்நான்

            எண்ணிறந்த கோடி பாவ மும்பொறுத் தீடேற்றவும்

            ஏகனுக்குரைக்க வேணும் இயேசு நாதர் சுவாமியே

 

            பொன்னை நாடும் ஆசையும் பொருளை நாடும் ஆசையும்

            பூமி தேடும் ஆசையும் சீமை தேடும் ஆசையும்

            கன்னி மாதர் ஆசையும் காம லீலை ஆசையும்

            கற்புலங்கள் ஐந்ததின் கணக்கில்லாத ஆசையும்

            மின்னும் ஆடை ஆடு மாடு வீடு வாசல் ஆசையும்

            மிக்கத் தந்தை தாயார் ஆசை மக்கள் பந்தின் ஆசையும்

            எண்ணி எண்ணியும் ஆசையும் இகழ்ந்து யான் பிழைக்கவென்று

            ஏகனுக்குரைக்க வேணும் இயேசு நாதர் சுவாமியே

 

            வஞ்ச மிஞ்சு பஞ்ச பாவி நெஞ்சில் அன்பில்லாதவன்

            வானவன் உரைத்த பத்து மறைதனை மறுத்தவன்

            தஞ்சமென்றடைந்த பேரை தள்ளிவிட்ட பாதகன்

            தன்ம நீதி நியாயமும் தவத்தையும் மறந்தவன்

            அஞ்சேன் னென்றுனைப் பணிந்திடாத துர்குணன் என்னை

            அக்கினி க்கடப்படுத்தி ஆக்கினைவிடாமலே

            எஞ் ஜென்மாவி முற்றிலும் இறங்க வேண்டும் என்பதாய்

            ஏகனுக்குரைக்க வேணும் இயேசு நாதர் சுவாமியே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...