அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்
அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் இராகம்: தால்லி தாளம்: ஆதி பல்லவி அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் தேவ பாலனை அனுபல்லவி தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த - எம் மேசியா இயேசுவைப் போற்றி சரணங்கள் 1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி ஆர்ப்பரிப்போமின்று கூடி, தீன பந்தா மெம் திவ்விய னேசுவை தினமதில் துதிப்போம் கொண்டாடி - அக 2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய் ஈன வுருவ மெடுத்தார் ஏவையின் பாவ வேரையறுத் தெமக் கினிய இரட்சையுமளித்தார் - அக 3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே ! மேலுலகோருக்கும் கோனே ! பாவிகள் மோட்சப் பதவியடைந்திட தாவியிப் புவியில் வந்தாரே - அக