22 July 2021

மனுவாயினார் மகத்துவ ராஜன்

மனுவாயினார் மகத்துவ ராஜன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

பல்லவி

                   மனுவாயினார் மகத்துவ ராஜன்

                        மனுவாயினார் மகத்துவ ராஜன் (2)

 

சரணங்கள்

 

1.         ஆதாம் செய் பவமற

            அன்பின் மாரி பெய்ய (2)

            பாதகத்தாய் பாரின் உபகாரம் தாம் செய்ய

            ஏதம் இல்லா நவ இதயம் அவர்க்குய்ய - மனுவாயினார்

 

2.         சிங்கார ஏதேனாம் பூங்காவனத்தினில் (2)

            பங்க மாதத்தமை பாங்கான பந்தத்தை

            அங்காத அன்புடன் பொறுப்பேற்று ஈந்திட - மனுவாயினார்

 

3.         இறை சாயலை இலங்கும் வரப்பிரசாதத்தை (2)

            மறைக்கற்பனை மீறி இழந்து கலங்கிய

            நரரை மீட்டவர்க்கு தம் சாயல் அணிவிக்க - மனுவாயினார்

 

- வேதநாயகம் சாஸ்திரிகள்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...