ஆகாப் என்னும் இராஜா ஒருவன்

ஆகாப் என்னும் இராஜா ஒருவன் ஆண்டு வந்தானாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    ஆகாப் என்னும் இராஜா ஒருவன் ஆண்டு வந்தானாம்

                        அவனைப் பார்க்க எலியா தீர்க்கத்தரிசி சென்றாராம்

                        உந்தன் மீது தேவக் கோபம் என்றுரைத்தாராம்

                        மழையும் பனியும் இந்த நாட்டில் வராது என்றாராம்

 

1.         மழை பொழியும் காலம் வந்து கடந்து போயிடிச்சாம்

            மழை இல்லாமல் மிருகம் எல்லாம் மாண்டு போயிடிச்சாம்

            ஆகாபுக்கு எலியா மேலே கோபம் வந்திடிச்சாம்

            எலியா தாத்தா காட்டுக்குள்ளே ஓடிப் போனாராம்

 

2.         காட்டுக்குள்ளே எலியாவுக்கு பசியும் வந்திடுச்சாம்

            கண் மயங்க கடவுளிடம் வேண்டிக் கொண்டாராம்

            அழகு காகம் குரலைக் கேட்டு வெளியே வந்தாராம்

            தாத்தாவுக்கு இறைச்சி ரொட்டி தினமும் கொடுத்ததாம்

 

3.         சின்னத் தம்பி சின்னத் தங்கை கண் கலங்காதே

            எலியா தாத்தா தேவன் என்றும் நம்மிடம் உண்டே

            உந்தன் வாழ்வை உள்ளங்கையில் வரைந்து உள்ளாரே

            அவரில்லாமல் முடிகள் ஒன்றும் தரையில் விழாதே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு