குருசினில் தொங்கினீர் குருதியும் சிந்தினீர்
பல்லவி
குருசினில்
தொங்கினீர்,
குருதியும் சிந்தினீர்,
குரு
இயேசு நாதா! நீர்
கொல்கொதாவில்-(2)
சரணங்கள்
1. கால் கரங்களில்
ஆணிகள் பாய்ந்தே
கண்கள்
அயர்ந்தே,
தாகத்தால் தொய்ந்தே-(2)
ஏனோ
இத்தனை பாடுகள்
ஏற்றீர்? -(2)
என் பாவம்
போக்கிட வந்ததாலோ?-(2)
-குருசினில்
2. தலை சாய்க்க உலகில்
ஸ்தலம் இல்லை
என்றே
திருவாய்
மலர்ந்த தேவ குமாரா! -(2)
சிலூவை
தான் உமக்குத்
தலை சாய்க்க
இடமோஇ-(2)
பலியாகி
மீட்டிட வந்ததாலோ?-(2)
– குருசினில்
3. தேகமதிலே
வாதையடைந்தே
பாதகரின்
பாவம் ஏற்றவராய்
-(2)
தேவனோடொன்னையும்
சேர்த்திட
ஒன்றாய்த்-(2)
தேவாட்டுக்குட்டியாய்
வந்தீரோ நீர்?-(2)
-குருசினில்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment