30 May 2019

பூமியின் நற்குடிகளே கர்த்தரை என்றும்


23. (51 T)     போற்றிப் பாடிக்கொண்டாடுவோம்

மோகனம்                100-ம் சங்கீதம்                ஆதி தாளம்

பல்லவி
          பூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும்
          போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள்.

அனுபல்லவி
            ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன்
            சாஷ்டாங்கம் செய்து மிகச்சேவித்துப் பணியுங்கள். - பூமி

சரணங்கள்
1.         கர்த்தரே தெய்வமென்று கண்டுமே கொள்வீர்கள்,
            காசினியில் நாமல்ல கடவுளே சிருஷ்டித்தார்.
            அற்புத தேவனின் அரிய ஜனங்களாவோம்,
            ஆண்டவர் ஆடுகளாய் அவனியில் இருக்கின்றோம். - பூமி

2.         ஆலய வாசல்களில் அரிய துதிகளோடும்,
            அவர் பிரகாரங்களில் அதிபுகழ்ச்சிகளோடும்,
            சீல முடனே வந்து சிறப்புடனே பணிந்து
            சீர் பெரும் ஆண்டவரைச்சேர்ந்துமே துதியுங்கள். - பூமி

3.         கர்த்தர் மகாவல்லவர், கர்த்தர் அருட்கிருபை,
            காசினியில் தேடினும் காண்பீரோ பெரியது.
            தற்பரன் உண்மையோ தலை முறைக்கு முள்ளது,
            தலை வணங்கியே பரன் தாள் பணிந்து மகிழ்வீர். - பூமி

4.         ஆதி பிதா தமக்கும் அரிய குமாரனுக்கும்,
            அரூபியான தேவனின் ஆவி பரிசுத்தர்க்கும்,
            நீதி முறை வழுவா நிமல திரியேகர்க்கும்
            நித்திய மகிமையும் புகழுண்டாகவே. ஆமென்.

அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை

அனுபந்தம்:22

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

22. (50T)     ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே

 

சங்கராபரணம்.                            98-ம் சங்கீதம்                  ஆதிதாளம்

 

பல்லவி

 

          அதிசயங்களைச் செய்யும் ஆண்டவரை

          ஆனந்தமாக ஆர்ப்பரிப்பீரே.

 

அனுபல்லவி

 

            இரக்கம் கிருபை சத்தியம் விளங்க

            இஸ்ரவேலரை நினைவு கூர்ந்தார். - அதி

 

சரணங்கள்

 

1.         நீதியை ஜாதிகள் முன்பாக நிறுத்தி

            நித்திய ரட்சிப்பைப் பிரஸ்தாபப்படுத்திப்

            பூமியின் எல்லைகள் நின்புகழ் காணப்

            புரிந்தனை நின் அருள் பூரணமாக; - அதி

 

2.         பூரிகை எக்காளம் சுரமண்டலத்தால்

            பூரிப்பாய்த் துதிப்பீர் ஆண்டவர் நாமம்,

            கீத சத்தத்தாலே கீர்த்தனம்பண்ணிக்

            கிருபாகரனைப் போற்றிடுவீரே. - அதி

 

3.         ஆழியும் பூமியும் அதிலுள்ள யாவும்

            ஆறுகள் மலைகள் அனைத்துமே பாடும்.

            ஜாதிகள் யாவையும் சரிவர நடத்தி

            நீதியாய் நியாயம் விசாரிக்க வருவார். - அதி

 

4.         பரமபிதாவே பரிசுத்த தேவா,

            பாரினில் உதித்த தேவ குமாரா,

            ஆவியாய் எங்கும் நிறைந்து விளங்கும்

            ஆரண திரித்துவா, துதி உமக்கே. - அதி

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம்


21. (49 T)     போற்றக் கூடிடுவோம்

சங்கராபரணம்               95-ம் சங்கீதம்                  ஏகதாளம்

பல்லவி
          கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம்,
          கன்மலையைப் போற்றக் கூடிடுவோம்.

அனுபல்லவி
                        கர்த்தரின் தூய சந்நிதி நாடி
                        நித்தியனைத் துதியுடன் கொண்டாடி,

சரணங்கள்
1.         தேவாதி தேவன் தேவர்க்கும் ராசன்
            தெள்ளமுது தெளிதேன் மாதேவன்,
            மூவாதி முதல்வன் மூவுலகாள் வோன்,
            மூவுல கனைத்தும் படைத்த நிமலன். - கர்த்

2.         ஆழங்களும் மகா உயரங்களும்
            அத்தன் திருக்கையில் உள்ளனவே.
            அகன்ற சாகரம் ஆன பெரும் பூமி
            ஆயின யாவும் அவர் கரத்தால் நேமி. - கர்த்

3.         நம்மைப் படைத்த நல்லாயன் முன்னே
            நாம் பணிந்திடுவோம் பண்புடனே,
            நம் கர்த்தர் என்றும் நல் மேய்ச்சல் ஈவார்.
            நம்பு மடியார்க்கு நாதன் கோன் ஆவார். - கர்த்

4.         கர்த்தரின் சத்தம் காதினால் கேட்போம்,
            கடுஞ் சினமும் கொள்ளா திருப்போம்,
            முற் பிதாக்களன்று மூட்டிய கோபம் போல்
            முன்னவர்க்குச் சினம் மூட்டாது வாழ்வோம். - கர்த்

5.         சோதனைக் குழியில் வீழ்ந்து மாளாதீர்,
            சோதனை செய்யவும் முன் வராதீர்,
            பாதகப் பிசாசின் தீதகம் சிக்காதீர்,
            நாதனைக் கிட்டியே நலங்கள் பெறுவீர். - கர்த்

6.         ஆண்டவர் நமக்காய் ஆயத்தம் செய்தவோர்
            ஆனந்த நிலையிருக்குது பார்,
            அண்ணல் பதம்பாடி ஆர்ப்பரிப்பாய்க்கூடி,
            அன்பரைத் தேடுவோம், பொன்னகர் நாடுவோம். - கர்த்

7.         தந்தை சுதனுக்கும் ஆவியாம் தேவர்க்கும்
            தங்கிட மகிமை எந்நாளுமே.
            எந்தையாம் மாதிரியேகர்க்குச் சந்ததம்
            இங்கிதம் புகழ் உண்டாகவே. ஆமென். - கர்த்

உன்னதமானவர் சன்னிதி மறைவில்


20. (48 T)    சரண் புகுவேன்

ஸ்ரீராகம்                            91-ம் சங்கீதம்                  ஆதிதாளம்

பல்லவி
                   உன்னதமானவர் சன்னிதி மறைவில்
                   வந்தடைக்கலம் சரண் புகுவேன்.

சரணங்கள்
1.         சத்தியம் பரிசை கேடகமாகும்
            சர்வ வல்லவர் நிழலில் தங்கிடுவேன்.

2.         வேடன் கண்ணிக், கொள்ளைநோய், சங்காரம்
            விக்கினம் யாவும் விலக்கித்தற்காப்பார்.

3.         வாதை, பொல்லாப்பு, பயங்கரம் அகற்றி,
            வாழ் நாளைக் கழிக்கக் கிருபை செய்வார்.

4.         நீடித்த நாட்களால் திருப்தியாக்கி
            நித்திய ரட்சிப்பைக் கட்டளை யிடுவார்.

5.         பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கும்
            சதா காலமும் மகிமை உண்டாகும்.

வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும்


19. (37 Y)    அருள் நாதனே போற்றி

ஆரபி                                                          ஆதிதாளம்
அகவல்

            வானமும் புவியும் வழங்கு பல்லுயிர்களும்
            ஞானமாய் அமைத்தருள் நாதனே போற்றி!
            மானிட உயிர்க்கு நின் மகத்வ நற் சாயலைத்
            தான் அளித்தருள் செய்யுந் தற்பரா போற்றி!
            சீவன் சுகம் பெலம் சிறந்த ஞானம் பொருள்
            மேவடியார்க்கருள் விண்ணவா போற்றி!
            துன்பந்துயரம் சோர்வினில் அடியரை
            அன்பொடாதரித்திடும் அண்ணலே போற்றி!
            அற்புதமாய் எமக்கடைக்கலம் புரிந்து
            தற்காத்திரட்சை செய் தயா நிதி போற்றி!
            பாவியை மீட்டு நற் பரகதி சேர்க்க மெய்ச்
            சீவனாய் உதித்திடும் தெய்வமே போற்றி!
           

            உய்ந்நெறி கொடுத்தெமக் குயர்ந்த நம்பிக்கை
            துய்ய சீவியம் அருள் சோதியே போற்றி!
            கர்த்னே, கருணைக் கடவுளே போற்றி!
            அத்தனே நின்னிணை யடி போற்றி, போற்றி!

- ஆ. அ.

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள்


18. (379)      கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள்

தோடி                    (Benedicite)                   ரூபகதாளம்

பல்லவி 
          கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரமனை
          நித்தமே புகழ்ந்து துதியுங்கள்.

அனுபல்லவி
            சித்தியா யிகத்தை வகுத்து,-சக்தியால் மனுவைப் படைத்து
            முத்தியிலவனைச்சேர்க்க, இத்தரை மகவையனுப்பிய.

சரணங்கள்
1.         ஏகன் செய் சகல சிருஷ்டியே-நீர் எழுந்து பாடும்,
            தேக மில்லாத தூதரே;
            மேகவானங்கள் சேரும்-மீதுள்ள தண்ணீர் வாரும்
            வேகவான் வலிமை நீரும்-விமலனைப்புகழ்ந்து பாடும். - கர்த்

2.         சூரிய சந்திர சோதியே,-சோபித்து மின்னும்
            ஆரியவுடுக்கள் கோடியே,
            மாரியே பனியே காற்றே,-மகத்துவ நெருப்பே கொதிப்பே,
            சீரான மழையின் காலம்-சேருங் கோடைகாலம் நீரும், - கர்த்

3.         மூடிடும் பனியாலாங்கட்டி-முழங்கிப்பாடும்,
            ஆடிடுங்குளிரே பனிக்கட்டிக்
            காடெலா முறைந்த நீரே-கல் மழையான நீரே,
            தேடிடும் இரவே பகலே,-தினம் வருமொளியே இருளே - கர்த்

4.         மின்னலே மேக சேனையே,-மாபூமி நீயே
            சின்னதே சிகர மலைகளே,
            நன்னய தாவரங்கள்-நாடிடுமூற்றின் கண்கள்,
            எண்ணிடாக்கடலே, நதிகள்-ஏகமாயெழுந்து தொழுங்கள் - கர்த்

5.         மச்சமே நீந்தும் செந்துவே-மாபரனைப்போற்றும்
            உச்சமெ ழும்பறவையே,
            பட்சிக்குங் காட்டு மிருகம்,-பயமிலா நாட்டு மிருகம்
            மிச்சமாய்ப்போற்றவாரும்,-மிக மிகப்புகழ்ந்து பாடும், - கர்த்

6.         மனுக்களே மனுக்கள் சாதியே,-ஏகோவா தனையே
            வணங்கிடு மிஸ்ரவேலரே,
            தினமவரூழ்யஞ் செய்வோர்,-திகழ் பரதீசிலுய்வோர்,
            மனமதில் தாழ்மையுள்ளோர்,-மிகவெழு நெருப்பை வெல்வோர். - கர்த்

- சி. தே. ஞா.



விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது


17. (328)      விடியல் நேரத்தின் வெள்ளி முளைத்தது

பூபாளம்                                                        சாபுதாளம்

1.         விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது,
            வீட்டுச் சேவலும் விழித்துக் கூவுது,
            வடிவில் மிகுந்தோர் பறவை பாடுது,
            வணங்க மனமே, நீ எழுந்திராய்!

2.         காகங் கூவுது, காலை யாகுது,
            காணுங் குணதிசை வெளுத்துக் காணுது,
            ஆக மனதினில் அடியார் துதிக்கிறார்,
            அதிக சீக்கிரம் எழுந்திராய்!

3.         மூத்த முத்தர்கள் துதிகளெழும்புது,
            முனிவர் துதிகளின் மூட்மெழும்புது,
            காத்த கர்த்தரின் கரமுமெழும்புது,
            கடுகி மனமே, நீ எழுந்திராய்!

4.         அந்தகாரமும் அகன்றுபோகுது,
            அழகுத் தாமரை அரும்பு மலருது,
            இந்த நேரத்தில் இணங்கித் துதித்திட,
            இரக்கங் கிடைக்திடும், எழுந்திராய்!

5.         மயில்கள் தோகையை விரிய நெளிக்குது,
            மகத்வ மிருகங்கள் ஓடி யொளிக்குது,
            குயில்க ளோசையைக் காட்டத் துவக்குது,
            குருவை வணங்க நீ எழுந்திராய்!

6.         யேசு நாமமே இன்ப ரசமென
            யேற்றி துதிசெய்யும் அடியார்க் கருள்புரி!
            யேசு நாமத்தை யெண்ணித் தாசனின்
            ஏழை மனமே, நீ எழுந்திராய்!

- யோ. ஈ.

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...