08 June 2026

இந்த இரவில் எமைக் காரும் இயேசையாவே

கீ.கை:66

66.  காகம்: சயிந்தவி.                                                                                                                 தாளம்: ஆதி.

 

                             கண்ணிகள்

 

1.       இந்த இர வில்எமைக் காரும் - இயேசையாவே நீர்

          உந்தன்திருக் கண்ணாலே பாரும்.

 

2.         சென்ற பகல் முழுதும் நீரே - எங்க ளுக்கொரு

            தீமை வராமல் காத்தீர் தேவே.

 

3.         சரீர ஆத்தும நன்மை ஐயா - எல்லாம் உம்மாலே

            தட்டின்றி பெற்றுக் கொள்வோம் மெய்யாய்.

 

4.         இரவில் நித்திரை செய்யும் போதே - காக்கும் தூதர்கள்

            இறங்கிச் சூழச் செய்யும்இப் போதே

 

5.         சுகமான நித்திரையைத் தாரும் - சாத்தான் சோதனை

            துன்பம் வராமலே தற்காரும்.

 

6.         அக்கினி மோசங்களால் சேதம் - பொல்லாங்குகள்

            அணுகாமல் காத்திடுமே பாசம்.

 

7.         மறுநாள் அதிகாலையைக் காண - கிருபை செய்யும்

            மனுவேல் உமது பாதம் பூண

 

8.         நெஞ்சம் விழித்து உம்மைக் கெஞ்சும் - சீயோன் மகளின்

            நேயாநீர் இங்கு வந்து கொஞ்சும்.

 

9.         தாசர் சபையாரின் மன்றாட்டு - ஐயா உமது

            சமுகம் வரட்டுமே தாராட்டு.

இத்தனை பெருங்குருசை ஐயா நீர்

ஞா.கீ:108

 

108. இராகம்: எதுகுலகாம்போதி                       ஆதிதாளம் (412)

 

                             பல்லவி

 

                   இத்தனை பெருங்குருசை, ஐயா, நீர்

                        எடுத்தெப்படி நடப்பீர் துய்யா!

 

                             அனுபல்லவி

 

            இத்தரையோர் வினையறச் சத்தமற்ற ஆடதுபோல்

            இடறி தாளுந் தத்தளித்து வீழ்ந்திட

            எழுந்து பதறியே சடலம் சோர்ந்திட - இத்தனை

 

                             சரணங்கள்

 

1.         கொல்கதா பாதையினிற் கூட்டம் அடர்ந்திடவும்;

            கொடியோர் நடத்திவரவும்,

            நல்மாதரான சிலர் நாடிப் புலம்பிடவும்

            நயமதாகி தோள்கள் சிவக்கவும்

            நாதா, உமக்குப்பின் சீமோன் சுமக்கவும் - இத்தனை

 

2.         வானா சனத்திலே மாறத நன்மைகளை

            மாந்தர் அனுபவித்திட,

            ஞானாகரனே, உந்தன் நற்றாள் கரத்தினிலே

            நைய ஆணியினா லிறுக்கவும்,

            மெய்யில் பாரமாய்ச் சுமையொறுக்கவும் - இத்தனை

 

3.         ஆவியொடுங்கிடவும், அவயவம் நடுங்கிடவும்,

            அருள் முகம் வாடிடவும்,

            பாவிகளைத் தமது பாரிச[1]மாக்கிடவும்;

            பாடுபட வந்த இரக்க வாசனே

            பரமநாதனின் அருமைச் சேயனே - இத்தனை

 

 

- தேவசகாயம் ஆசாரியர்

 



[1] பக்கம்

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...