26 June 2025

புதிய ஆண்டு பிறந்தது

புதிய ஆண்டு பிறந்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          புதிய ஆண்டு பிறந்தது

            புதிய வாழ்வு மலர்ந்தது - 2

            என் இயேசு நாமமே நலம்

            எல்லாம் அளித்தது - 2

 

                        ஹாப்பி நியூயேர் ஹாப்பி நியூயேர்

                        ஹாப்பி நியூயேர் ஹாப்பி நியூயேர் - 2

 

1.         புனித எண்ணம் புதிய பாதை

            மனித வாழ்வின் உயர்ந்த நோக்கம்

            அனைத்தும் எனக்கு கிடைத்ததாலே

            நன்றி இயேசுவே

            உன் பாதம் சரணமே - 2 - புதிய ஆண்டு

 

2.         சென்ற ஆண்டின் தீமை நீக்கி

            இந்த ஆண்டில் நன்மை செய்து

            என்றும் என்றும் நன்மை நாடும்

            எனது நெஞ்சமே

            புது கவிதை பாடுமே - 2 - புதிய ஆண்டு

 

 

- Sis Esther Baby

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

புதிய வருஷம் பிறந்தது

புதிய வருஷம் பிறந்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   புதிய வருஷம் பிறந்தது

                        புதிய வாழ்வு மலர்ந்தது

                        இயேசுவுக்காய் என்றும் நான்

                        வாழ்ந்திருப்பேன்

                        என் நேசருக்காய் என்றும் நான்

                        வாழ்ந்திருப்பேன் - 2

 

1.         சென்ற வருஷம் முழுவதும் எபிநேசரே

            இந்த வருஷம் முழுமைக்கும் இம்மானுவேலே - 2

            நடத்திடுவார் நம்மை காத்திடுவார் -2

            நாளெல்லாம் கூடயிருந்து ஆசீர்வதிப்பார் - 2

 

2.         கோணலான பாதையெல்லாம் செவ்வையாக்குவார்

            கோலும் தடியும் கொண்டு தினம் தேற்றி நடத்துவார் - 2

            நல்லவரே இயேசு வல்லவரே -2

            நன்மை கிருபை நாளெல்லாம் தந்திடுவாரே -2

 

3.         தடைகள் நீக்கும் ராஜா முன் செல்கிறார்

            பயமில்லாமல் மகிழ்ச்சியோடு சென்றிடுவோம் - 2

            பொக்கிஷமும் மறைந்த புதையல்களும் - 2

            பெரியவராம் இயேசு நமக்கு தந்திடுவாரே - 2

 

4.         வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்

            வழுவாமல் நித்தமும் நடத்திடுவாரே - 2

            பெரியவரே இயேசு உயர்ந்தவரே - 2

            புதிதான பாதைகளை திறந்திடுவாரே - 2

 

5.         ஜாதிகளை சுதந்திரமாக்கி தருவார்

            பூமியின் எல்லைகளை சொந்தமாக்குவார் - 2

            கட்டி முடியா தேவ ஆலயங்கள் - 2

            கர்த்தர் இயேசு நிறைவாக கட்டித் தருவாரே - 2

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...