19 August 2014

வந்து நல்வரம் தந்தனுப்பையா


நல்வரந் தந்தனுப்பையா

299. (13) ஆனந்தபைரவி                                ரூபகதாளம்

கண்ணிகள்

1.         வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ,
            வல்ல ஆவியை நல்கியாளையா.

2.         பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ,
            பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்.

3.         காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ,
            கருத்தில் இருத் தப்போதே பாக்கியம்.

4.         புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ,
            புத்தி தா நான் புதிதாய் உய்யவே.

5.         இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ,
            என்னில் கமழ ஈவாய் அந்தமே.
- ச. அருமைநாயகம்

அனுக்ரக வார்த்தையோடே

ஞா.கீ:499

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

499. இராகம்: சங்கராபரணம்                            ஆதி தாளம்

 

1.       அனுக்ரக வார்த்தையோடே-இப்போ-து

            அடியாரை அனுப்புமையா!

            மனமதில் தயவுறும் மகத்துவபரனே!

            வந்தனம் உமக்காமென்.

 

2.         நின்திரு நாமமதில்-கேட்ட

            நிர்மலமாம் மொழிகள்

            சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்

            சாமி நின்னருள் புரிவாய்.

 

3.         தோத்திரம், புகழ், மகிமை,-கீர்த்தி,

            துதிகனம், தினமுமக்கே

            பாத்திரமே; அதிசோபித பரனே!

            பாதசரண் ஆமென்!

 

 

- ச.ஜே. சிங்

 

16 July 2013

ஆயிரம் ஆயிரம் பாடல்களை

கீ.கீ:25

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       ஆயிரம் ஆயிரம் பாடல்களை

            ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்!

            யாவரும் தேமொழிப் பாடல்களால்

            இயேசுவைப் பாடிட வாருங்களேன்

 

                        அல்லேலூயா! அல்லேலூயா!

                        என்றெல்லாரும் பாடிடுவோம்

                        அல்லலில்லை! அல்லலில்லை!

                        ஆனந்தமாய்ப் பாடிடுவோம்

 

2.         புதிய புதிய பாடல்களைப்

            புனைந்தே பண்களும் சேருங்களேன்

            துதிகள் நிறையும் கானங்களால்

            தொழுதே இறைவனைக் காணுங்களேன் - அல்லேலூயா

 

3.         நெஞ்சின் நாவின் நாதங்களே

            நன்றி கூறும் கீதங்களால்

            மிஞ்சும் ஓசைத் தாளங்கலால்

            மேலும் பரவசம் கூடுங்களேன். - அல்லேலூயா

 

4.         எந்த நாளும் காலங்களும்

            இறைவனைப் போற்றும் நேரங்களே

            சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்

            சீயோனின் கீதம் பாடுங்களே. - அல்லேலூயா

 

 

- தி. தயானந்தன் பிரான்சிசு

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...