30 November 2021

பூவுலகின் பாவங்கள் போக்கிடவே

பூவுலகின் பாவங்கள் போக்கிடவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          பூவுலகின் பாவங்கள் போக்கிடவே

            விண்ணின் வேந்தன் மண்ணில் இன்று பிறந்தாரே 

            நம் ஒப்பில்லாத தேவ மைந்தன்

            தாழ்மை ரூபம் எடுத்தாரே 

            ஏழை கோலமாய் பிறந்தாரே 

 

                        நாமும் வாழ்த்தி பாடுவோம்

                        கொண்டாடி மகிழ்வோம்

                        சாஸ்டாங்கமாய் அவர்

                        பாதம் பணிவோம்

 

1.         நற்செய்தியை கேட்ட மேய்ப்பர்;

            ரட்சகரை -காண நாடி

            நட்சத்திரத்தை பின்தொடர;

            சாஸ்திரிகளும் -விரைந்தோடி

            முன்னணை மீது பாலனை கண்டு;

            மகிழ்ந்தனரே -வியந்தனரே

            பொன் வெள்ளைப்போளம்

            - தூபவர்க்கம்; படைத்தனரே பணிந்தனரே

 

2.         தேவன் நம்மில் வைத்த;

            அன்பை வெளிப்படுத்த

            நம் பாவம் நீக்கி ரட்சிக்க;

            தம் சொந்த குமாரனை

            -நமக்கு ஈந்தார்

            அவர் போல அன்பை வெளிப்படுத்தும்;

            நற்கிரியை -செய்திடுவோம்

            இயேசுவின் நாமம் உயர்த்திடும்;

            சாட்சிகளாய் -வாழ்ந்திடுவோம்.

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

பனிமழை பொழியும் இரவு

பனிமழை பொழியும் இரவு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   பனிமழை பொழியும் இரவு

                        பாலகன் இயேசு வரவு

                        தேவன் காட்டியது தயவு

                        தம் மைந்தனைத் தந்தது ஈவு

 

1.         வானம் விட்டது அதிசயம்

            பூமி வந்தது அதிசயம்

            மாட்டுத் தொழுவம் தெரிந்து கொண்டது

            அதிசயம் அதிசயம்

                        கொட்டிலில்  கோமகன் இயேசு

                        தென்றல் காற்றே வீசு

 

2.         தூதர்கள்  வாழ்த்தினர் அதிசயம்

            ஆயர்கள் பணிந்தனர் அதிசயம்

            அறிஞர் பொன்போளம் தூபம் படைத்தது

            அதிசயம் அதிசயம்

                        புதுமை பாலன் இயேசு

                        பூங்காற்றே நீ வீசு

 

3.         தேடிவந்தது அதிசயம்

            மீட்டுக் கொண்டது அதிசயம்

            பாவங்கள் நீக்கி பரிசுத்தம் தந்தது

            அதிசயம் அதிசயம்

                        உள்ளத்தில் வந்தார் இயேசு

                        இல்லாமல் போனதே மாசு

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...