Posts

Showing posts from May, 2017

அருணோதயம் எழுந்திடுவோம்

1.       அருணோதயம் எழுந்திடுவோம்              பரனேசுவைத் துதிப்போம்              அருணோதயம் பரமானந்தம்              பரனோடுறவாடவும். 2.           இதைப் போன்றொரு அருணோதயம்              எம்மைச் சந்திக்கும் மனமே              ஆ! என்னானந்தம்! ஜோதி சூரியனாம்              எந்தன் நேச ரெழும்பும் நாள். 3.           நன்றியாலுள்ளம் பூரித்திடுதே              அன்னையாம் மேசு காருண்யம்           ...

தோத்திர பாத்திரனே தேவா

தோத்திரந் துதி உமக்கே 336. (16) சங்கராபரணம்                                           ஆதி தாளம் பல்லவி               தோத்திர பாத்திரனே, தேவா,               தோத்திரந் துதியுமக்கே!               நேத்திரம்போல் முழு ராத்ரியுங்காத்தோய்;               நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் 1.           சத்துரு பயங்களின்றி,-நல்ல              நித்திரை செய்ய எமை              பத்திரமாய்ச்சீ ...

நல்ல தேவனே ஞான ஜீவனே

வாழ்த்திப் போற்றுவேன் 335. மோகனம்                                             திஸ்ர ஏகதாளம் கண்ணிகள் 1.           நல்ல தேவனே, ஞான ஜீவனே;              வல்ல உமது கருணை தன்னை              வாழ்த்திப் போற்றுவேன். 2.           போன ராவிலே பொல்லாங்கின்றியே,              ஆன நல்ல அருளினாலே              அன்பாய்க் காத்தீரே. 3.           காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையே              சாலவும் துதித்துப் போற்றிச்   ...

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு

அதிகாலையில் உமைத் தேடுவேன் 334. நவரோஜ்                                                         ஏகதாளம் பல்லவி             அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தே             வாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே. அனுபல்லவி                           இதுகாறும் காத்த தந்தை நீரே;                           இனிமேலும் காத்தருள் செய்வீரே,       ...

தோத்திரம் க்ருபை கூர் ஐயா

கிருபைகூர் ஐயா 333. (20) கல்யாணி                                                  ஆதி தாளம் பல்லவி                           தோத்திரம்! க்ருபை கூர், ஐயா!                           விழி பார், ஐயா; விழி பார், ஐயா! சரணங்கள் 1.           பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்              காத்து வந்திடும், எனது கர்த்தாதி கர்த்தனே! - தோத்திரம் 2.      ...

கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்

இறைவனைத் துதி செய்ய எழுந்திராய் 332. (341) பூபாளம்                               சாபு தாளம் கண்ணிகள் 1.           கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்              துதி செய்ய மனமே-எழுந்திராய். 2.           வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்              திரண்ட தயை தேவை-நாடுவேன். 3.           கடவுளின் வல்லமை, கன மகிமை காணும்              இடமதில் செல்வதே-என் இஷ்டம். 4.           ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை          ...

ஐயனே உமது திருவடி களுக்கே

உமது திருவடிகளுக்கே தோத்திரம் 330. சங்கராபரணம்                               ஆதிதாளம் கண்ணிகள் 1.           ஐயனே! உமது திருவடி களுக்கே              ஆயிரந்தரந் தோத்திரம்!              மெய்யனே! உமது தயைகளை அடியேன்              விவரிக்க எம்மாத்திரம்? 2.           சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்              சேர்த்தரவணைத்தீரே;              அந்தடைவாயிப் பகலிலுங் கிருபை           ...

இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய் 331. (16) சுருட்டி                                           சாபு தாளம் பல்லவி               இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;               இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி               அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை               வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. - இன் சரணங்கள் 1.           போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம்          ...

காலமே தேவனைத் தேடு ஜீவ

காலமே தேவனைத் தேடு 329. (15) மோகனம்                                        சாபு தாளம் பல்லவி              காலமே தேவனைத் தேடு;-ஜீவ              காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு. அனுபல்லவி                          சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு;                          சீரான நித்திய ஜீவனை நாடு. - காலமே சரணங்கள் 1.           மன்னுயிர்க்காய் மரித்தாரே,-மனு      ...

கீழ் வான கோடியின்

Moscow 31                                           6, 6, 4, 6, 6, 6, 4 1.           கீழ் வான கோடியின்             செம் காந்தி சூரியன்                         எழும்பிடும்;             அடியார் ஆன்மத்தின்             நீதியின் சூரியன்             ஆரோக்கியம் சீருடன்                         எழும்பிடும். 2.          ராவிருள் நீங்கிற்றே    ...