12 May 2017

அருணோதயம் எழுந்திடுவோம்

கன்:69

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       அருணோதயம் எழுந்திடுவோம்

            பரனேசுவைத் துதிப்போம்

            அருணோதயம் பரமானந்தம்

            பரனோடுறவாடவும்.

 

2.         இதைப் போன்றொரு அருணோதயம்

            எம்மைச் சந்திக்கும் மனமே

            ஆ! என்னானந்தம்! ஜோதி சூரியனாம்

            எந்தன் நேச ரெழும்பும் நாள்.

 

3.         நன்றியாலுள்ளம் பூரித்திடுதே

            அன்னையாம் மேசு காருண்யம்

            ஒவ்வொன்றா யிதைத் தியானம் செய்யவும்

            எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம்

 

4.         போன ராவினில் ஜீவித்தோர் பலர்

            லோகம் விட்டுமே போய் விட்டார்

            ஆயினும் நமக்கிந்தத் தினமும்

            தந்த நேசரைத் துதிப்போம்

 

5.         நானிர் வாணியாய் வந்த வண்ணமே நிர்

            வாணியா யங்கு போகின்றேன்,

            கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ?

            நாடி போமந்த நாட்டிற்கே

 

6.         ஆயென் நேசரின் அன்பை யெண்ணவும்

            ஆனந்தம் பரமானந்தம்

            ஆயென் நேசரோர் நவ வான் புவி

            தானஞ் செய்ததே ஆனந்தம்

 

7.         பார்! தன் நேசரின் மார்பில் சாய்ந்தேகும்

            யாவரிள் இவ் வனாந்திரம்?

            எந்தன் நேசரின் கூடச் செல்கிறேன்

            சொந்த ராஜ்யத்தில் சேரவும்

 

8.         கொண்டல் மோதும் வறண்ட நாடிதில்

            நண்பரே கைவிடாதேயும்!

            ஆசையோடு நான் வாறே னென் துக்கம்

            பாசமா யங்கு தீர்த்திடும்

 

 

- அருள்திரு. ச. தாவீது

தோத்திர பாத்திரனே தேவா


தோத்திரந் துதி உமக்கே

336. (16) சங்கராபரணம்                                           ஆதி தாளம்

பல்லவி

            தோத்திர பாத்திரனே, தேவா,
            தோத்திரந் துதியுமக்கே!
            நேத்திரம்போல் முழு ராத்ரியுங்காத்தோய்;
            நித்தியம் துதியுமக்கே!

சரணங்கள்

1.         சத்துரு பயங்களின்றி,-நல்ல
            நித்திரை செய்ய எமை
            பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே[1]
            சுற்றிலுங் கோட்டையானாய். - தோத்திர

2.         விடிந்திருள் ஏகும்வரை-கண்ணின்
            விழிகளை மூடாமல்,
            துடி[2] கொள் தாய்போல் படிமிசை[3] எமது
            துணை எனக் காத்தவனே. - தோத்திர

3.         காரிருள் அகன்றிடவே,-நல்ல
            கதிரொளி திகழ்ந்திடவே,
            பாரிதைப் புரட்டி உருளச்செய் தேகன
            பாங்கு சீராக்கி வைத்தாய். - தோத்திர

4.         இன்றைத் தினமிதிலும்-தொழில்
            எந்தெந்த வகைகளிலும்
            உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள்
            ஊன்றியே காத்துக்கொள்வாய். - தோத்திர
- ப.ஈ. யோவான்



[1] உறங்கவைத்து
[2] பதைக்கிற
[3] பூமியின்மேல்

நல்ல தேவனே ஞான ஜீவனே


வாழ்த்திப் போற்றுவேன்

335. மோகனம்                                             திஸ்ர ஏகதாளம்

கண்ணிகள்

1.         நல்ல தேவனே, ஞான ஜீவனே;
            வல்ல உமது கருணை தன்னை
            வாழ்த்திப் போற்றுவேன்.

2.         போன ராவிலே பொல்லாங்கின்றியே,
            ஆன நல்ல அருளினாலே
            அன்பாய்க் காத்தீரே.

3.         காலையைக் கண்டேன், கர்த்தா உம்மையே
            சாலவும் துதித்துப் போற்றிச்
            சார்ந்து கொள்ளுவேன்.

4.         சென்ற ராவதின் இருளைப்போலவே,
            என்றன் பாவ இருளைப் போக்கி,
            இலங்கப் பண்ணுமே!

5.         இன்று நானுமே இன்பமாகவே,
            உன்றன் வழியில் நடக்கக் கருணை
            உதவவேணுமே!

6.         ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே,
            எளியன் இன்றும் நடக்க ஆவி
            ஈந்தருளுமே!

7.         கையைக் காவுமே, கண்ணைக் காவுமே!
            மெய்யைக் காத்து என்றன் மனதை
            மிகவும் காவுமே!

- ச. அருமைநாயகம்

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு

கி.கீ:334

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அதிகாலையில் உமைத் தேடுவேன்

 

334. நவரோஜ்                                                         ஏகதாளம்

 

                             பல்லவி

 

          அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தே

            வாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே.

 

                             அனுபல்லவி

 

                        இதுகாறும் காத்த தந்தை நீரே;

                        இனிமேலும் காத்தருள் செய்வீரே,

                        பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,

                        பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! - அதி

 

                             சரணங்கள்

 

1.         போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! - எப்

            போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!

            ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?

            எனக்கான ஈசனே! வான ராசனே!

            இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! - அதி

 

2.         பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது,-தப்

            பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,

            விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?

            விசுவாசங்கொண்டு மெய்ப் பாசமூண்டிட,

            விக்கினம்[1] யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது?   - அதி

 

3.         நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே! - தீ

            நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!

            பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே!

            புகழான நாதனே! வேத போதனே!

            பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! - அதி

 

 

- சா. பரமானந்தம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...