ஆற்றலாலும் அல்ல சக்தியாலும் அல்ல
ஆண்டவரின்
ஆவியாலே ஆகுமே - 2
1. மண்குடம்
பொற்குடம் ஆகுமா? - ஆகுமே
குறைகுடம்
நிறைகுடம் ஆகுமா? - ஆகுமே - 2
தண்ணீரும்
திராட்சை ரசம் ஆகுமா? - ஆகுமே
திராட்சை
ரசம் திருரத்தம் ஆகுமா? - ஆகுமே - 2 - ஆற்றலாலும்
2. செங்கடல்
பாதையாய் ஆகுமா? - ஆகுமே
செத்தவர்
உயிர்த்தெழல் ஆகுமா? - ஆகுமே - 2
சிங்கம்
மாடு நட்புறவு ஆகுமா? - ஆகுமே
சிறை வாழ்வு
திருவாழ்வு ஆகுமா? - ஆகுமே - 2 - ஆற்றலாலும்