ஏன் அழுகின்றாய் கண்ணே
ஏன் அழுகின்றாய் கண்ணே மேலும் அதிக பாடல்களுக்கு இப்பாடலின் கானொளியை முகநூலில் காண... (F#- Maj / 6/8 / T :88 ) ஏன் அழுகின்றாய் கண்ணே? எதற்கழுகின்றாய் ? நிச்சயம் முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது (2) கண்ணீரை காண்பவர் கணக்கினிலே வைப்பவர் விதையாய் நினைப்பவர் விடுதலை அளிப்பவர் (2) - ஏன் அழுகின்றாய் 1. அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையை பெற்றெடுத்தாள் ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2) உந்தனின் அழுகை மட்டும் அவர் சமூகம் எட்டாதோ உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச் செய்வார் (2) - ஏன் அழுகின்றாய் 2. யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்கொண்டான் தாவீதும் அழுதானே இழந்ததை திருப்பிக்கொண்டான் (2) உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ (2) உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச் செய்வார் - ஏன் அழுகின்றாய்