24 August 2019

Jeyamey Jeyamey

ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம்

ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம் எப்போதும்

இயேசு ராஜாவுக்கே

நாதனின் தரிசனம் நானிலத்தில் உள்ளோருக்கு

நல்வழிக் காட்டிடும் சுத்தாங்க அங்கத்திற்கே

 

1.         அலசடிப்பட்டிடும்[1] மானிடர் எல்லோரும் கூடி

            வருவார் சுத்தாங்கத்திற்கே

            இராஜமாணி பொன்னையா

            அருள்நிறையுள்ள சுத்தாங்க அங்கத்திற்கே

 

            வா வா பாவி மலைத்து நில்லாதே வா

            சுத்தாங்க அங்கத்திற்கே

            எதற்கும் அஞ்சாமல் தேர்போன்று எதிர்த்து நிற்கும்

            வீரர்கள் நிறைந்த சுத்தாங்க அங்கத்திற்கே

 

2.         பத்தொன்பதாம் நூற்றுக்கு மேல் இருபத்தி நால்வருடம்

            மாசி தேதி பதி னொன்றாம் அந்நாளை எதிர்பார்த்த

            சுத்தாங்க அங்கத்திற்கே

 

            ஜெயமே ஜெயமே ஜெயம் ஜெயம் எப்போதும்

            பரிசுத்த அங்கத்திற்கே


- போதகர் திரு. சா. சிலுவைமணி நாடார்,
மருதகுளம், திருநெல்வேலி மாவட்டம்.



[1] துன்பப்பட்டிடும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...