06 February 2017

தேவாதி தேவன் தனக்குச்


மங்களம்

378. (376) சௌராஷ்டிரம்                                     ஆதி தாளம்

பல்லவி

                   தேவாதி தேவன் தனக்குச்
                   சீர்த்தி[1] மேவு மங்களம்

அனுபல்லவி

            ஜீவாதிபதி நித்யனுக்குத்
            திவ்ய லோக ரட்சகனுக்குத் - தேவாதி

சரணங்கள்

1.         ஞானவேத நாயகனுக்கு,
            நரரை மீட்ட மகிபனுக்குத், - தேவாதி

2.         பக்தர் மறவா பாதகனுக்குப்
            பரம கருணா நீதனுக்குத், - தேவாதி

3.         ஜெக சரணிய நாதனுக்குச்
            சீஷர் புகழும் போதகனுக்குத், - தேவாதி

- ல்.ஈ. ஸ்தேவான்



[1] கீர்த்தி

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம்


O worship the King all glorious above

Hanover

24                                     10, 10, 11, 11

1.         மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்,
            வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்;
            நம் கேடகம் காவல் அனாதியானோர்,
            மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர்.

2.         சர்வ வல்லமை தயை போற்றுவோம்,
            ஒளி தரித்தோர், வானம் சூழ்ந்தோராம்;
            குமுறும் மின் மேகம் கோபரதமே,
            கொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே

3.         மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்;
            என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்;
            ஆ! உருக்க தயை! முற்றும் நிற்குமே,
            மீட்பர், நண்பர், காவலர், சிருஷ்டிகரே.

4.         ஆ! சர்வ சக்தி! சொல்லொண்ணா அன்பே!
            மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே,
            போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
            மெய் வணக்கமாய் துதி பாடலோடும்.

தூய தூய தூயா சர்வவல்ல நாதா


Holy, Holy, Holy, Lord God Almighty

Nicaea                                   Irregular

22

1.         தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
            தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
            தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
            காருணியரே, தூய திரியேகரே!

2.         தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
            தெய்வ ஆசன முன்னர் தம் கிரீடம் வைப்பரே,
            கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப் பெற்று,
            இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!

3.         தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,
            பாவக்கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர்?
            நீரே தூய, தூயர், மனோ வாக்குக் கெட்டா
            மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்,

4.         தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா!
            வானம், பூமி, ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே;
            தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
            காருணியரே, தூய திரியேகரே!

சேனையின் கர்த்தா


Sp S 23

21                                     5, 6, 7, 5, 5, 8

1.         சேனையின் கர்த்தா
                        சீர்நிறை யெகோவா!
            உம் வாசஸ்தலங்களே
                        எத்தனை இன்பம்!
                        கர்த்தனே என்றும்
            அவற்றை வாஞ்சித்திருப்பேன்.

2.         ராஜாதி ராஜா
                        சேனைகளின் கர்த்தா!
            உம் பீடம் என் வாஞ்சையே
                        உம் வீடடைந்தே
                        உம்மைத் துதித்தே
            உறைவோர் பாக்கியவான்களே.

3.         சேனையின் கர்த்தா!
                        சீர் பெருகும் நாதா!
            எம் கேடயமானோரே!
                        விண்ணப்பம் கேளும்
                        கண்ணோக்கிப் பாரும்,
            எண்ணெய் வார்த்த உம் தாசனை.

4.         மன்னா நீர் சூரியன்
                        என் நற்கேடயமும்;
            மகிமை கிருபை ஈவீர்;
                        உம் பக்தர் பேறு
                        நன்மை அநந்தம்
            உம்மை நம்புவோன் பாக்கியவான்.

5.         திரியேக தேவே!
                        மகிமை உமக்கே
            வளமாய் உண்டாகவே!
                        நித்தியம் ஆளும்,
                        சதா காலமும்
            உளதாம்படியே ஆமென்.

எவ்வண்ணமாக கர்த்தரே


Wherewith O God shall I draw near
Martyrdom.    Wiltshire

19                                                                                            C.M.

1.       எவ்வண்ணமாக, கர்த்தரே
                        உம்மை வணங்குவேன்?
            தெய்வீக ஈவைப் பெறவே
                        ஈடென்ன தருவேன்?

2.         அநேக காணிக்கைகளால்
                        உம் கோபம் மாறுமோ?
            நான் புண்ணிய  கிரியை செய்வதால்
                        கடாட்சம் வைப்பீரோ?

3.         பலியின் ரத்தம் வெள்ளமாய்
                        பாய்ந்தாலும், பாவத்தை
            நிவிர்த்தி செய்து சுத்தமாய்
                        ரட்சிக்கமாட்டாதே.

4.         நான் குற்றவாளி, ஆகையால்
                        என் பேரில் கோபமே
            நிலைத்திருந்து சாபத்தால்
                        அழிதல் நியாயமே.

5.         ஆனால் என் பாவம் சுமந்து
                        ரட்சகர் மரித்தார்;
            சாபத்தால் தலை குனிந்து
                        தம் ஆவியை விட்டார்.

6.         இப்போதும் பரலோகத்தில்
                        வேண்டுதல் செய்கிறார்;
            உம் திவ்விய சந்நிதானத்தில்
                        என்னை நினைக்கிறார்.

7.         இவ்வண்ணமாக, கர்த்தரே,
                        உம்மை வணங்குவேன்,
            என் நீதி இயேசு கிறிஸ்துவே,
                        அவரைப் பற்றினேன்.

எங்கும் நிறைந்த தெய்வமே


Rivaulx

18                                                                                     L.M.

1.         எங்கும் நிறைந்த தெய்வமே,
            ஏழை அடியார் பணிவாய்
            துங்கவன் உந்தன் பாதமே
            ஸ்தோத்திரிக்கின்றோம் ஏகமாய்.

2.         உலக எண்ணம் நீங்கியே
            உந்தனில் திட மனதாய்
            நலமாய் உள்ளம் பொங்கியே
            நாடித் துதிக்கச் செய் அன்பாய்.

3.         கேட்டிடும் தெய்வ வாக்கியம்
            கிருபையாய் மனதிலே
            நாட்டிட நின் சிலாக்கியம்
            நாங்கள் நிறையச் செய்காலே.

4.         தூதர்கள் கூடிப் பாடிடும்
            தூயர் உம்மை மா பாவிகள்
            பாதம் பணிந்து வேண்டினோம்
            பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள்.

ஆ கர்த்தாவே தாழ்மையாக

பாமாலை:16

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

Ermuntre dich mein schwacher Geist

Alleluya dulce carmen

16                                                                    8, 7, 8, 7, 4, 7

1.       ஆ கர்த்தாவே, தாழ்மையாக

                        திருப் பாதத்தண்டையே

            தெண்டனிட ஆவலாக

                        வந்தேன், நல்ல இயேசுவே;

                        உம்மைத் தேடி

            தரிசிக்கவே வந்தேன்.

 

2.         வல்ல கர்த்தாவினுடைய

                        தூய ஆட்டுக்குட்டியே,

            நீரே என்றும் என்னுடைய

                        ஞான மணவாளனே;

                        உம்மைத் தேடி

            தரிசிக்கவே வந்தேன்.

 

3.         என் பிரார்த்தனையைக் கேளும்,

                        அத்தியந்த பணிவாய்;

            கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்

                        உம்முடைய பிள்ளையாய்;

                        உம்மைத் தேடி

            தரிசிக்கவே வந்தேன்.

அலங்கார வாசலாலே கோவிலுட்

ஞாபா:2

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

2. All saints; Neander                                                           8, 7, 8, 7, 7, 7

 

"Open now thy gates of beauty"

 

1.       அலங்கார வாசலாலே

                        கோவிலுட் ப்ரவேசிப்பேன்;

            தேவ வீட்டில் நன்மையாலே

                        ஆத்துமத்தில் பூரிப்பேன்;

            தேவா, உம்தம் சமூகம்

            நல்கும் திவ்ய; வெளிச்சம்.

 

2.         கர்த்தரே, உம்மண்டை வந்த

                        என்னண்டைக்கு வாருமேன்;

            நீர் இறங்கும் போதனந்த

                        இன்பத்தால் மகிழுவேன்;

            ஏழை என்தன் நெஞ்சமும்

            தேவ ஸ்தலமாகிடும்.

 

3.         பயத்தோ டும்மண்டை சேர,

                        என் மன்றாட்டும் துதியும்

            நல்ல பலியாக ஏற

                        உமதாவியைக் கொடும்;

            தேகம், ஆவி, யாவையும்

            சுத்தமாக்கி யருளும்.

 

4.         நல்ல நிலத்தில் விழுந்த

                        விதை பயிராகுமே;

            அவ்வாறாக நான் மிகுந்த

                        கனிகளைத் தரவே

            வசனத்தைக் காக்க நீர்

            ஈவளிக்கக் கடவீர்.

 

5.         விசுவாசத்தை விடாமல்

                        அதில் பலப்படவும்

            ஒருக்காலும் தவறாமல்

                        உம்மை நான் பின் செல்லவும்

            அருட்சக்தியை நீரே

            எனக்கீயும், கர்த்தரே.

 

6.         நாதா, பேசும்; தாசன் கேட்பேன்;

                        நீர் இப்பாழ் நிலத்திலே

            பெய்யப் பண்ணும் மன்னா சேர்ப்பேன்

                        நல் தியானத்துடனே;

            தாரும் ஜீவ பானத்தை;

            தீரும் பசி தாகத்தை.

 

 


"Open Now Thy Gates of Beauty"

by Benjamin Schmolck, 1672-1737

Translated by Catherine Winkworth, 1829-1878

 

1.         Open now Thy gates of beauty,

            Zion, let me enter there,

            Where my soul in joyful duty

            Waits for Him who answers prayer.

            Oh, how blessed is this place,

            Filled with solace, light, and grace!

 

2.         Lord, my God, I come before Thee,

            Come Thou also unto me;

            Where we find Thee and adore Thee,

            There a heaven on earth must be.

            To my heart, oh, enter Thou,

            Let it be Thy temple now!

 

3.         Here Thy praise is gladly chanted,

            Here Thy seed is duly sown;

            Let my soul, where it is planted,

            Bring forth precious sheaves alone,

            So that all I hear may be

            Fruitful unto life in me.

 

4.         Thou my faith increase and quicken,

            Let me keep Thy gift divine,

            Howsoe'er temptations thicken;

            May Thy Word still o'er me shine

            As my guiding star through life,

            As my comfort in my strife.

 

5.         Speak, O God, and I will hear Thee,

            Let Thy will be done indeed;

            May I undisturbed draw near Thee

            While Thou dost Thy people feed.

            Here of life the fountain flows,

            Here is balm for all our woes.

 

The Lutheran Hymnal

Hymn #1

Text: Ps. 100:4

Author: Benjamin Schmolck, 1732, cento

Translated by: Catherine Winkworth, 1863, alt.

Titled: "Tut mir auf die schoene Pforte"

Composer: Joachim Neander, 1680

Tune: "Neander"

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...