03 May 2022

புதிய பாடல் பாடிப் பாடி இயேசு

புதிய பாடல் பாடி பாடி இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                        புதிய பாடல் பாடிப் பாடி

                   இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம்

                        புகழ்ந்து பாடல் பாடிப் பாடி - இயேசு

                        ராஜாவைக் கொண்டாடுவோம்

 

1.         கழுவினார் இரத்தத்தாலே

            சுகம் தந்தார் காயத்தாலே

            தேற்றினார் வசனத்தாலே

            திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு

 

2.         உறுதியாய் பற்றிக் கொண்டோம்

            உம்மையே நம்பி உள்ளோம்

            பூரண சமாதானம்

            புவிதனில் தருபவரே - தினமும் (2)

 

3.         அதிசயமானவரே

            ஆலோசனைக் கர்த்தரே

            வல்லமை உள்ள தேவா

            வரங்களின் மன்னவனே - எல்லா (2)

 

4.         கூப்பிட்டேன் பதில் வந்தது

            குறைவெல்லாம் நிறைவானது

            மகிமையின் ராஜா அவர்

            மகத்துவமானவரே - இயேசு (2)

 

5.         மாலையில் அழுகை என்றால்

            காலையில் அக்களிப்பு

            கோபமோ ஒரு நிமிடம்

            கிருபையோ நித்தம் நித்தம் - அவர் (2)

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

02 May 2022

சிங்காசனம் விட்டிறங்கி

சிங்காசனம் விட்டிறங்கி நம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          சிங்காசனம் விட்டிறங்கி

            நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து - 2

            தூக்கினாரே சேற்றினின்று

            உயர்த்தினாரே கன்மலை மீது - 2

 

                        இயேசுவின் அன்பு

                        அற்புதம் அற்புதமே

                        என் நேசரின் அன்பு

                        என்றென்றும் மாறாததே - 2

 

2.         என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே

            என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார் - 2

            என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே

            என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே - 2

 

3.         பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே

            புத்திர சுவிகாரம் தந்திட்டாரே - 2

            எனக்காகவே யாவையுமே செய்து

            முடித்திட்டார் சிலுவையிலே - 2

 

4.         நன்மையினால் திருப்தியாக்குகிறார்

            இரக்கங்களால் மூடிசூட்டுகிறார் - 2

            கழுகைப்போல் புது பெலன் கொண்டு

            உயர பறந்திடச் செய்கிறாரே - 2

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...