சிங்காசனம் விட்டிறங்கி
சிங்காசனம் விட்டிறங்கி
நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து
- 2
தூக்கினாரே சேற்றினின்று
உயர்த்தினாரே கன்மலை மீது - 2
ஆ இயேசுவின் அன்பு
அற்புதம் அற்புதமே
ஓ என் நேசரின் அன்பு
என்றென்றும் மாறாததே
- 2
2. என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே
என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார்
- 2
என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே
என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே - 2
3. பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே
புத்திர சுவிகாரம் தந்திட்டாரே
- 2
எனக்காகவே யாவையுமே செய்து
முடித்திட்டார் சிலுவையிலே
- 2
4. நன்மையினால் திருப்தியாக்குகிறார்
இரக்கங்களால் மூடிசூட்டுகிறார் - 2
கழுகைப்போல் புது பெலன் கொண்டு
உயர பறந்திடச்
செய்கிறாரே - 2
Comments
Post a Comment