வந்து நல்வரம் தந்தனுப்பையா
நல்வரந் தந்தனுப்பையா 299. (13) ஆனந்தபைரவி ரூபகதாளம் கண்ணிகள் 1. வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ, வல்ல ஆவியை நல்கியாளையா. 2. பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ, பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும். 3. காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ, கருத்தில் இருத் தப்போதே பாக்கியம். 4. புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ, புத்தி தா நான் புதிதாய் உய்யவே. 5. இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ, என்னில் கமழ ஈவாய் அந்தமே. - ச. அருமைநாயகம்