Posts

Showing posts from 2014

வந்து நல்வரம் தந்தனுப்பையா

நல்வரந் தந்தனுப்பையா 299. (13) ஆனந்தபைரவி                                ரூபகதாளம் கண்ணிகள் 1.           வந்து நல்வரம் தந்தனுப்பையா,-ஆதிநாதா, ஜோதீ,              வல்ல ஆவியை நல்கியாளையா. 2.           பண்ணின ஜெபம் எண்ணிக்கேள், இன்னும்-ஆதிநாதா, ஜோதீ,              பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும். 3.           காதில் கேட்ட உன் வேத வாக்கியம்,-ஆதிநாதா, ஜோதீ,              கருத்தில் இருத் தப்போதே பாக்கியம். 4.           புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே-ஆதிநாதா, ஜோதீ,              புத்தி தா நான் புதிதாய் உய்யவே. 5.           இந்தப் பலியின் இனிய கந்தமே,-ஆதிநாதா, ஜோதீ,              என்னில் கமழ ஈவாய் அந்தமே. - ச. அருமைநாயகம்

அல்லேலூயா தேவனை அவருடைய

கீதங்களும் கீர்த்தனைகளும் : 36 சங்கீதம் : 150 1. அல்லேலூயா தேவனை அவருடைய     பரிசுத்த ஆலயத்தில் அவரைத் துதியுங்கள்     என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)     வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்து     வல்லமை நிறைந்த கிரியைக்காக     அல்லேலூயா (4 முறை) 2.  மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்     எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்     என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)     வீனை சுரமண்டலம் தம்புரு நடத்தோடும்     யாழோடும், குழலோடும், தாளங்களோடும்     அல்லேலூயா (4 முறை) 3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்     இங்கித சங்கீதத்தோடும் அவரைத் துதியுங்கள்     என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)     சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்     சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள்     அல்லேலூயா (4 முறை)  

அனுக்ரக வார்த்தையோடே

கீதங்களும் கீர்த்தனைகளும் : 35 கிறிஸ்தவ கீர்த்தனைகள் : 377 சங்கராபரணம்                                      ஆதி தாளம் 1. அனுக்ரக வார்த்தையோடே -இப்போ-து     அடியாரை அனுப்புமையா!     மனதில் தயவுறும் மகத்துவபரனே!     வந்தனம் உமக்காமென். 2. நின்திரு நாமமதில் - கேட்ட     நிர்மலமாம் மொழிகள்     சந்ததம் மிக பலனளித்திடச்     சாமி நின்னருள் புரிவாய். 3. தோத்திரம், புகழ், மகிமை - கீர்த்தி,     துதி கனம் தினமுமக்கே     பாத்திரமே; அதிசோபித பரனே!     பாதசரண் ஆமென்!