Posts

Showing posts from 2015

கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்

            கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்             வானிலே அதன் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்! 1. தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்    தூது சொன்னது அற்புதம் அற்புதம்    பாமரர், மேய்ப்பர், தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமே    மேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே 2. கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்    மன்னன் வரவு அற்புதம்    அகிலம் முழுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமே    உலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே 3. பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனை    தேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்    சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும் அற்புதம் அற்புதமே    விடுதலை பெறும்வழி துவக்கியே வைத்ததும் அற்புதம் அற்புதமே 4. இயேசுவின் சன்னிதி அடைக்கலம் தேடுவோர்    வாழ்வு மலர்ந்திடும் அற்புதம் அற்புதம்    மீண்டும் பி...

அரசனைக் காணமலிருப்போமோ

அரசனைக் காணாமலிருப்போமோ? 36.      மாஞ்சி                                     ஆதிதாளம் பல்லவி                         அரசனைக் காணமலிருப்போமோ?-நமது                         ஆயுளை வீணாகக் கழிப்போமோ?-அரசனை அனுபல்லவி                பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ?-யூதர்             பாடனு பவங்களை ஒழிப்போமோ?-யூத - அரசனைக் சரணங்கள்   1.          யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே,-இஸ்ரேல்             ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,           ...

அதிகாலையில் பாலனை தேடி

       அதிகாலையில் பாலனை தேடி        செல்வோம் நாம் யாவரும் கூடி        அந்த மாட்டையும் குடில் நாடி        தேவ பாலனை பணிந்திட வாரீர்        வாரீர் வாரீர் வாரீர்        நாம் செல்வோம் 1. அன்னைமா மரியின் மடிமேலே    மன்னன் மகவாகவே தோன்ற   விண் தூதர்கள் பாடல்கள் பாட   விரைவாக நாம் செல்வோம் கேட்க --- அதி 2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே    அந்த மன்னவன் முன்னிலை நின்றே   தம் சிந்தை குளிர்ந்திட போற்றும்   நல்ல காட்சியை கண்டிட வாரீர் --- அதி